(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

இல்லாமல் மகாபாதகங்கள் செய்கிறான். சட்டங்களையும், காவல் துறையையும், தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஒரு பகுதியினர் செய்கிற அட்டூழியங்களினால், அப்பாவிகளும் ஏழைகளும், விவசாயிகளும், பெண்களும், வேற்றுமதம் சார்ந்தவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு அல்லலுறுகின்றனர்........"

 " சரி, அதற்கு தீர்வு என்ன?"

 " மனிதனுக்கு தெய்வம் நம்மை தண்டிக்குமே என்னும் பயம் விட்டுப் போய்விட்டது! அந்த பயத்தை ஏற்படுத்த, தாங்கள் முன்வரவேண்டும்!"

 " என்ன செய்யலாம், சொல்லுங்கள்?"

 " ஹரஹர மகாதேவா! அது தெரியாமல்தானே, இங்கு வந்திருக்கிறேன்......."

 ஈசனும் தேவியும் சிரித்தவாறு, நாரதருக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

 " தேவி! தங்கள் எண்ணம் என்னவோ?"

 " ஈசனே! எனது தமிழ்நாட்டு விஜயம், எனது தாய்மை உணர்வால், துவக்கத்திலிருந்தே தவறாகிவிட்டது. நான் தெரிந்துகொண்டதெல்லாம், தவறு சகஜமாகிப் போய்விட்டது, இதற்கு ஆண், பெண் இருவருமே பொறுப்பு! பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

 மனித சமுதாயம் தங்களை காப்பாற்றாது என முடிவெடுத்து, பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

 அதனால், இப்போது பொறுப்பு நமக்கு அதிகமாகிவிட்டது! உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும், ஈசனே!"

 "தேவி! எனது விஜயமும் தங்கள் கருத்தை பலப்படுத்துகிறது. ஆனாலும், ஒரு முதியவர் மிகவும் அழகாக நடப்பை விளக்கினார்.

 ஒருபுறம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டாலும்,மறுபுறத்தில் அவர்கள் இப்போது எல்லா துறைகளிலும் பங்கெடுத்து நல்ல முன்னேற்றமும் கண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில், உச்சநீதிமன்றத்தில், ராணுவத்தில், நிதிநிர்வாகத்தில் முத்திரை பதிக்கிறார்கள்.

 அதேபோல, லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டாலும், மக்களுக்கு நன்மைகளும், புதிய வசதிகளும் வாழ்க்கைத்தர உயர்வும் கிடைத்திருக்கிறது.

 மொத்தத்தில், நிலமை கட்டுமீறிப் போய்விடவில்லை, இப்போது, தேவி!, நாம் செய்யவேண்டியதெல்லாம் பெண்களுக்கு அதிக துணிவும், ஒதுங்கி வாழ்கிற ஆண்களுக்கும் பயந்து நடுங்குகிற படித்தவர்களுக்கு சமூக முன்னேற்றத்தில் அதிக அளவு பங்கு எடுக்க உற்சாகமும் தரவேண்டும். செய்வோம்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.