(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 28 - சாகம்பரி குமார்

வினய் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க, அதிரதன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அப்போது கங்காதரன் பதட்டமாக வந்தார்.

"உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டும்" என்றார்.

"என்ன விஷயம்?" என்று க்ருபா கேட்டார்.

"இன்று காலை அஞ்சலை தூக்கு போட்டு இறந்து விட்டாள். அவள் துளசிக்கு செய்த துரோகத்திற்கு பரிகாரமாக இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டாள். இந்த விஷயத்தை அதிதியிடம் சொல்ல வேண்டும். நீ என்னுடன் உடனே வா" என்று கங்காதரன் அழைத்தார்.

அவர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்த கிருபாகரன் உடனே எழுந்தார். அபியின் அறையை நோக்கி சென்றார். அங்கு கதவைத் தட்டி,

' அதிதி வெளியே வாம்மா... ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்" என்று அழைத்தார்.

அதிதி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். பதட்டமாக நின்ற கங்காதரனை பார்த்து,

" மாமா என்ன விஷயம்" என்று  கேட்டாள்.

" இன்று காலை உன் சித்தி அஞ்சலை தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போய்விட்டாள். இதை தலைவர் தெரிவித்திருக்கிறார். நாம் உடனே ஊருக்கு செல்ல வேண்டும்" என்று சொன்னார்.

அவர் கூறியதன் அதிர்வலை அறைக்கு உள்ளேயும் பரவியது என்பது அங்கு ஏற்பட்ட சிறிய சப்தங்களால் அவருக்குப் புலப்பட்டது. அதிதி உடனேயே உள் பக்கம் திரும்பி,

" அக்கா நீங்கள் பதட்டப்படாதீர்கள். என்ன விஷயம் என்று தெரியாது.உண்மையான தகவலா என்று  நான் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றாள். கங்காதரன்,

" இல்லை அம்மா எனக்கு வந்த தகவல் சரியானதுதான். உன் சித்தி துளசி அக்காவிற்கு செய்த துரோகத்திற்கு இந்த தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டாள். உன் அம்மா இறந்த அதே புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார் ஒரே இரவில் என்ன நடந்திருக்கும் என்பதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.