(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

"ஒரே இரவில் பெரிய மாற்றங்களை செய்வது என்றால்  ஒன்று கடவுளால் முடியும், இல்லை என்றால் மனசாட்சியாக முடியும். இதை தான் பொயட்டிக் ஜஸ்டிஸ் என்று சொல்வார்கள். மற்றவர்கள் எடுத்துச் சொல்லியும் புரிபடாத நியாயம் மனசாட்சி பேசும் போது பிடிபட்டு விடும். அந்த மாதிரி ஒரு விஷயம் தான் நிகழ்ந்திருக்கிறது ". என்று க்ருபா விளக்கினார்.

" இதற்குத்தான் நான் நேற்றே உன்னிடம் சொன்னேன்... உன் சித்தியை சட்டப்படி தண்டிக்க செய்து விடலாம் என்று சொன்னேன். ஆனால் நீ தான் குறுக்கே புகுந்து அந்த விஷயத்தை மாற்றினாய். இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று பார்." அதிரதன் அதிதியிடம் கடிந்து கொண்டான்.

" என்ன நடந்தது..  எதனால் இவ்வாறு நடந்தது?. என்பது இன்னும் எனக்கு பிடிபடவில்லை.. நேற்றுவரை சித்தி தன்னுடைய செயலுக்காக வருந்துவது போல் தெரியவில்லைஅவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அந்த எண்ணம் மேலும் மேலும்  விரோதத்தை தூண்டும். அதை நாம் விட்டுக் கொடுத்து விடுவோம் என்றுதான் அந்த முடிவை எடுத்தேன். அதை அதில் என்ன தவறு ஏற்பட்டிருக்கும்" என்று குழம்பினாள்.

"ஒருவருக்கு செய்த பாவத்தை வாய்விட்டு பேசி புரிய வைக்க முடியாது. அவர் சார்ந்த நினைவுகள் பேசி புரிய வைக்கும். அந்த நினைவுகளை அந்த வீடு நேற்று உன் சித்திக்கு படம் போட்டு காட்டி இருக்கும். அதனுடைய தாக்கத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூடவே உன் சித்தப்பாவும் அவர்களை விட்டு விலகிதான் இருக்கிறார். எனவே அவர் தானாகவே முடிவு எடுக்கும்படி ஆகியிருக்கும்" என்று கங்காதரன் விளக்கினார்.

"வினைப்பகை வீயாது பின்சென்று அடும். அஞ்சலை துளசிக்கு செய்த தீய செயல்கள் அவளுக்கு திரும்பி இருக்கின்றன. மனசாட்சியின் சாட்டை சுழல ஆரம்பித்து விட்டால்அதிலிருந்து யாராலும்  தப்பிக்க   முடியாது." க்ருபா பெருமூச்சு விட்டார்.

அபி இருந்த அறைக்குள் திரும்பிய அதிதி,

" அக்கா, நான் சென்று பார்த்துவிட்டு நாளை காலையில் வந்து விடுகிறேன். நீங்கள் தயவுசெய்து பொறுமையாக பத்திரமாக இருங்கள்" என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.