(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்."

"முதலில் நாம் செய்யவேண்டியது அபியை பாதித்திருக்கும் அந்த எலும்பு நோயை சரிசெய்ய வேண்டும். அதற்கு  முதலில் டெஸ்ட் செய்ய வேண்டும். அதற்கான அறுவை சிகிச்சையை அவள் உடம்பு தாங்குமா என்பது எனக்கு சந்தேகம்தான்... எனவே இதற்கு மட்டும் மாற்று மருத்துவம் எதையாவது தேட வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.

"மாற்று மருத்துவம் என்று எதை சொல்கிறீர்கள் பாஸ் "என்று வினய் கேட்டான்.

"மூலிகை மருத்துவத்தைதான் சொல்கிறேன். எனக்கு இதில் ஏற்கனவே சிறிது பரிச்சயமும் உள்ளதுஆயுர்வேத சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை எனக்கு நன்றாக தெரியும். அவரை மனதில் வைத்துதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்."

"நீங்கள் ஜெனிட்டாவின் தாத்தாவை சொல்கிறீர்களா பாஸ்"

"கரெக்ட, அவரை நான் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் ஏதாவது சிகிச்சைமுறை இருக்குமா என்று கேட்க வேண்டும். முக்கியமாக எலும்புகளை பலப்படுத்தும் வழிமுறைகளை அவரிடம் விசாரிக்க வேண்டும். அவரால் செய்ய முடியும் என்றால் அது சரியான மருத்துவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்"

"ஆங்கில மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை முறைகள் அதற்கு இருக்கின்றனவே பாஸ்... அறுவை சிகிச்சை சிறந்தது என்று சொல்வார்களே. அது அபிக்கு ஒத்து வராதா?"

"ஆப்ரேஷன் செய்து அவர்களுடைய எலும்பை குணப்படுத்த முடியும். ஆனால் அதனுடைய பின்விளைவுகளை அவள் உடம்பு தாங்கிக்கொள்ளுமா என்பதுதான் எனக்கு சந்தேகமாக உள்ளது."

"ஓகே பாஸ் நீங்கள் எப்பொழுது ஜெனிட்டாவின்  தாத்தாவை சந்திக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

" ஜெனிடாவின் தாத்தாவை நான் பாலக்காட்டில் சென்றுதான் சந்திக்க வேண்டும். அதற்கு முன் அபியுடைய உடல்நிலை பற்றிய குறிப்புகளை எடுத்து செல்லவேண்டும்ஃபுல் பாடி செக்கப்.."

"அவங்களுக்கு இந்த நிறம் இல்லாமல் இருப்பது தோலில் மட்டும்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.