(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

" சரி"

" நீங்கள் எப்படி நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே இருக்கலாம்"

" சரிஆவ்.. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த கசப்பான விஷயம் என்று நீ சொன்னது அன்று நீ என்மீது கட்டை…  பூத்தொட்டி...  டப்பா.. டுப்பான்னு  இவற்றையெல்லாம் வீசி அடித்தாயே அதை சொல்கிறாயா?' என்று கேட்டான்.

"அச்சோ.. அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. நம்முடைய கணவர்தானே என்று நான் கொஞ்சம் உரிமை எடுத்து அவ்வாறு நடந்து கொண்டேன். அவ்வளவுதான்... அது என் உரிமை அல்லவா!" என்று கேட்டாள்.

"கணவனை தூக்கி போட்டு மிதிப்பது உரிமையா…? இது எந்த ஊர் நியாயம் அம்மா? இதில் நீ என்னிடம் கடைசி வரை பயணத்தில் துணைக்கு வருவேன் என்று வேறு சொல்கிறாய். எனக்கு அங்குதான் பயமாக உள்ளது. நீ நீயாகவே இரு நான் நானாகவே இருக்கிறேன. இந்த உரிமை எருமை என்றெல்லாம் கூறி என்னை பயமுறுத்தாதே"

"நீங்கள் கேலி செய்கிறீர்கள். நான் உண்மையாக சொல்கிறேன். நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். நல்ல மனைவியாக இருப்பேன். உங்களுடைய எல்லா கவலைகளையும் என்னிடம் நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்"

"சரிம்மா.. நான் தேவைப்பட்டால் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கிறேன். உன்கிட்ட சொல்லாம யார்ட்ட சொல்ல போறேன். நீ இப்ப போய் தூங்கு" என்றான்.

 அவனை திரும்பி பார்த்துக்கொண்டே அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

 அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவள் எதற்கு இப்படி வழியாக வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!. திடீரென்று அவன் மேல் அவளுக்கு என்ன கருணை வந்தது. என்று யோசித்தான். ஒருவேளை அபிக்கு அவன் சிகிச்சை செய்வதால் அவனை 'கூல்' செய்ய வேண்டும் என்று நினைத்து இவ்வாறு பேசுகிறாளோ என்று தோன்றியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.