(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பாதிப்பு இருக்குமோ?. "என்று வினய் சொன்னான்.

"ஆமாம் அங்கிள் கூட சொன்னார்.. அவளுக்கு இப்பொழுது அடிபட்டப்போது ரத்தம் வந்ததாக சொன்னார். இந்த ரத்த காயங்களுக்கு மருந்து இட்டதாகவும் சொன்னார். எனவே அவளுக்கு பிரச்சினை என்பது தோலில் மட்டும்தான் இருக்கிறது".

"அதுவும் ஒரு வகையான புற்றுநோய்தான் அதிதி. அதற்குதான் நாம் மரபணுவில் சிகிச்சை செய்ய வேண்டும். அது அல்லாமல் உள் உறுப்புகளை நாம் டெஸ்ட் செய்தே ஆகவேண்டும்" என்று அதிரதன் சொன்னான்.

"அபியை டெஸ்ட் செய்வதற்கு என் நண்பனிடமிருந்து எமர்ஜென்சி ஆம்புலன்சை வரவழைக்கிறேன். அதில் எல்லாவிதமான டெஸ்ட் செய்வதற்கான கருவிகள் இருக்கும். ஸ்கேனிங்.. ரத்த மாதிரி பரிசோதனை.. இதய துடிப்பு மானிட்டர் என்று அனைத்தும் இருக்கும்நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றான்.

"ஓகே பாஸ்நான் ஜெனிட்டாவின் தாத்தாவை சந்திக்க ஏற்பாடு செய்றேன்" என்று வினய் எழுந்தான்.

அங்கு அதிரதனும் அதிதியும் மட்டுமே இருந்தனர். அதிதியின் மனதில் இருந்த கேள்வி தானாக அவளிடம் வெளிப்பட்டது. அவள் அதிரதனிடம்,

" யார் அந்த ஜெனிட்டா?" என்று மெதுவாக கேட்டாள்.

"அவளைப் பற்றி நான் உன்னிடம் சொல்லவே இல்லையா!. அவள் என்னிடம் சயின்டிபிக் உதவியாளராக இருந்தாள். அவள் மைக்ரோபயாலஜி படித்தவள்மூலிகை மருத்துவத்தில் பயிற்சியும் பெற்றிருந்தாள். ஏனெனில் அவளுடைய தாத்தா ஒரு ஆயுர்வேதிக் வைத்தியர் ஆவார்அவள் அவரிடம் பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாள்.   மூலிகைகள் கொண்டு மரபணுவில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்று என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள். அது ஓரளவுக்கு வேலை செய்யவும் ஆரம்பித்தது. எங்களுக்கு சரியான முடிவுகள் கிடைக்கும் முன்பே…"

" முன்பே என்ன ஆனது?"

" அவள் இறந்து விட்டாள்"

அதை சொல்லும் பொழுது அதிரதன் அதிதியின் அருகில் வந்து அவளுடைய தோளை இறுகப் பிடித்து இறுக்கமாக அணைத்தவாறு அந்த வார்த்தையை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.