(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

முடியாது என்று யோசித்தான்.

"அதிதி  நீ ஒரு அதிமேதாவி என்று குறிப்பால் உணர்த்தி விட்டாய். தயவுசெய்து இப்பொழுது  உன்னுடைய பிடித்தமான…  வழக்கமான…  ஆர்வமான…  சமையல் வேலையை செய். நாங்கள் இருவரும் கொஞ்சம் கலந்தாலோசித்து திட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும்." அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

அதிதி அவனை பரிதாபமாக பார்த்து,

"சாரி நான் தப்பா சொல்லிட்டேனா.." என்றாள்.

" பாஸ் அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள். எல்லாமே இப்படித்தான் நடக்கிறது. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் அவர்களும் சொன்னார்கள். " என்றவன்,

" பாஸ் எனக்கு ஒரு சந்தேகம் இப்பொழுது அபியிடம் இருந்து நாம் டிஎன்ஏவை சோதிக்கும் பொழுது அதில் ம்யுட்டேஷன்  செய்யப்பட்ட மரபணுதான் இருக்கும். அதனுடைய ஒரிஜினல் அமைப்பு நமக்கு எங்கே கிடைக்கும்"

"சாரி ம்யுட்டேஷன் ம்யுட்டேஷன்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?" என்று அதிதி குறுக்கிட்டாள். அதற்கு அதிரதன்,

" தமிழில் சொல்ல வேண்டுமெனில் அதை பிறழ்வு என்று சொல்லலாம்சில சமயம் மரபணு தொடரில்  உள்ள விவரங்கள் மாறிவிடும். அதனால் புரோட்டின் உருவாக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். "

"மரபணுவில் அந்த பிறழ்வு எப்படி நடந்திருக்கும்?"

"அது கெமிக்கல் ரியாக்ஷனால் நடக்கலாம். அல்லது ஏதாவது கதிர்வீச்சு அதை பாதித்திருந்தால் நடக்கலாம்… .மரபணுவில் ஏற்பட்ட அந்த தவறை  நாம்திருத்தினால் நமக்கு தேவையான ரிசல்ட் கிடைத்துவிடும்".என்றவன் வினயிடம் திரும்பி,

" நீ கேட்ட ஒரிஜினல்  எங்கே இருந்து கிடைக்கும்…?.  ம்.. அதிதி இடம் இருந்துதான் நாம் அதனை பெற வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே கவலை என்னவெனில் அபியின் மரபணு தொடரில் மாற்றம் செய்யப்பட்ட விவரங்கள்…  அதிதியின் மரபணுவில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அதனுடைய காப்பியை எடுத்து இந்த மரபணுவில் சேர்த்து நம்முடைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.