(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சொன்னாள்.

" தயவுசெய்து…  தயவுசெய்து… " என்று அழுத்தமாக சொல்லி விட்டு கிளம்பினாள்.

அவர்கள் க்ருபாவிடம் விடைபெற்று கிளம்பி வரும் வழியில் அதிரதன் அதிதியிடம் கேட்டான்..

" உன் அக்கா இந்த விஷயத்திற்கு என்ன மாதிரி ரியாக்ட் செய்தார்கள்?" அதற்கு அதிதி,

" அக்கா என்னை போல அல்லஅவளிடம் அறசீற்றம் அப்போதே அதிகம் இருக்கும். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் சிரித்தாள். பிறகு அழ ஆரம்பித்தாள். அந்த அழுகைக்கு காரணம் அம்மாவிற்கு நடத்தப்பட்ட அநீதிக்கு பலவாறாக பதில்கள் கிடைத்துவிட்டன  என்று நம்பியதால் இருக்கலாம்" என்றாள்.

பிறகு அவர்கள் தாதி பட்டிக்கு சென்றனர். அங்கு சென்றவுடன் சித்தப்பாவை பார்க்கவும் அதிதிக்கு  அழுகை வந்து விட்டது. சித்தப்பாவின் குழந்தைகளை ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.

" சித்தப்பா, நான் இவ்வாறு நடக்கும் என்று நினைக்கவில்லை" என்று அழுதாள். அதற்கு செல்வா,

" இதுதான் நடக்க வேண்டும். அதுதான் சரியான நீதி" என்று கூறினார்.

"ஆனால் சித்தப்பா நீங்கள் என்னால் தான் உங்கள் மனைவியை இழந்து விட்டீர்கள்" என்று அதிதி சொன்னாள்.

' இல்லை அம்மா... இது எனக்கும் தண்டனைதான். அவள் தவறு செய்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தேன் அல்லவா…  அதற்குரிய தண்டனையை நானும் என் குழந்தைகளும் அனுபவித்துதான் ஆகவேண்டும். இனி என் குழந்தைகளுடைய வாழ்க்கையை கவனிப்பது மட்டுமே என்னுடைய பொறுப்பாக இருக்கும். என்னுடைய முழு கவனமும் அதில் தான் இருக்கும். நீ இதையெல்லாம் நினைத்துக்குழப்பிக் கொள்ளாதே. இதற்கும் உனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீ உண்மையில் அவளுக்கு நல்லது தான் செய்தாய். ஆனால் அந்த நன்மையின் வீச்சை தாங்கிக் கொள்ளக் கூடிய நல்ல மனம் அவளிடம் இல்லை. அவள் செய்த பாவங்கள் நீ செய்த நன்மையை தாங்க முடியாத

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.