(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"ஒவ்வொரு உயிரின் உயிர் ஆக்கத்திற்கும் செயலாக்கத்திற்கும் புரோட்டீன்கள்  தேவைப்படுகின்றன. ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கு குறிப்பிட்ட புரோட்டின்  தேவைப்படும். அதுபற்றி டிஎன்ஏ, ஆர்என்ஏ எனப்படும் அமினோ அமிலங்களில் பதியப்பட்டிருக்கும். இவை மரபணுவில் இருக்கும்.எனவே மரபணு.. டிஎன்ஏ... புரோட்டின் உருவாக்கம்.. என்றுதான் செயல்முறை திட்டம் இருக்கும். ஆனால் ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் முறையில் ஒரு வியாதியை குணப்படுத்த அதற்கு காரணமான தவறான புரோட்டீனை கண்டுபிடிப்போம். அதை உருவாக்கிய டிஎன்ஏவை கண்டுபிடிப்போம். அதற்குரிய மரபணுவில் சென்று மாற்றங்களை கண்டு பிடிப்போம். மாற்றம் என்பது பொதுவாக ம்யுட்டேஷனாகத்தான் இருக்கும். அதை கண்டுபிடித்து சரி செய்தால் குறிப்பிட்ட தவறு சரியாகிவிடும்."

"சரி செய்வது என்றால் வெட்டுவது ஒட்டுவது என்று சொன்னீர்களே... அது தானே" என்றாள்.

ஆமாம், அதைத்தான் ஜீன் எடிட்டிங் என்று சொல்வோம். தேவையில்லாததை எடுத்துவிடுவோம். தேவையான மூலக்கூறை அதில் சேர்ப்போம். சில சமயம் தேவையில்லாததை வேறு டிஎன்ஏ கொண்டு சைலன்ட்…  அதாவது அதன் பாதிப்பு இல்லாததுபோல் செய்வோம்."

"நாங்க சமைக்கிற போது இப்படித்தான் பண்ணுவோம். முதல்ல சமையல் குறிப்பு வச்சுகிட்டு தேவையான பொருட்களை சேர்த்து தேவையான முறையில் சமைப்போம். சில சமயம் சமையல் தவறாகி விட்டால்…  அதை டேஸ்ட் பார்த்துஅதில் எது சரியில்லை என்பதை கண்டுபிடித்து அதனை சரி செய்வோம். உப்பு அதிகமாயிடுச்சுனா அதுல எலுமிச்சை சாறை பிழிந்து விடுவோம். அதுபோலவே காரம் அதிகமாக இருந்தால் ஒரு ஸ்பூன் வெல்லத்தைச் சேர்ப்போம். தோசை மாவில் புளிப்பு  அதிகமாக இருந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து பேலன்ஸ் செய்வோம். அப்படித்தானே சொல்லுகிறீர்கள்"

அதிதி விளக்கமாக கூறினாள். அதை கேட்டு வினய் வாயை மூடிக்கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரிப்பது புரிந்தது. அதிரதன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். இதைவிட மோசமாக ரிவர்ஸ் ஜெனிடிக்ஸை யாராலும் விளக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.