(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

உனக்கு தெரியுமா". என்றவன்,

"அதற்காக இப்படியே அமர்ந்து கொள்ளாதே. இரவு உணவை நீயும் நானும்தான் தயார் செய்ய வேண்டும் என்று அப்பா ஆர்டர் போட்டிருக்கிறார். எழுந்து வா' என்றான்.

"சார், இப்பதான் நீங்க என்னை சாப்பிடணும்னு சொன்னிங்க. உடனே சமைக்கவும் சொல்றீங்க. நான் எதை செய்வது?' என்று கேட்டாள்.

" எது சொன்னாலும்... நான் சொல்வதை நீ செய்யப் போவதில்லை. உனக்காக தோன்றுவதை செய்வாய். நீ அதையே செய். நான் வினயுடன் கொஞ்சம் டிஸ்கஸ் செய்து விட்டு வருகிறேன்" என்று நகர்ந்தான்.

உடனேயே டிபன் ப்ளேட்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்த அதிதி, அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

" நீங்கள் என்னதான் திட்டமிடுகிறார்கள் என்பதை நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

"கொஞ்சம் ஜீன் ஆராய்ச்சி மருத்துவம் பற்றி நான் சொல்லித் தரவும் உனக்கு  ரொம்பவும் ஆர்வம் வந்துவிட்டது. சரி வா!. ஆனால் இது முழுக்க முழுக்க மரபணு சிகிச்சையாக இருக்காது. இதில் நான் பல மாற்றங்களை செய்து  பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சொன்ன மாதிரி மாற்று மருத்துவங்களை நான் பயன்படுத்திதான் ஆக வேண்டும்."

"ஏன் அப்படி சொல்கிறீர்கள் நீங்கள் ஏதோ ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்று சொன்னீர்களே.. அந்த முறையில் முற்றிலும் சரிசெய்ய முடியாதா?" என்று கேட்டாள்.

" அது இன்னும் முழுமை பெறாத அறிவியலாகதான் இருக்கிறது. அதனை பயன்படுத்தி நாம் சில மாற்றங்களைக் கொண்டு வர முடியும். மற்றபடி நமக்கு தேவையான முழுமையான மாற்றங்களை செய்ய முடியாது".

"முதலில் ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்றால் என்னவென்று சொல்லுங்கள் நான் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்" என்றாள்.

"வா, உனக்கு புரியும் அளவிற்கு எளிமையாக சொல்லித்தர பார்க்கிறேன்என்று வினயின் அருகில் சென்று அமர்ந்தான்.

" ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்பது நார்மலாக செய்யக்கூடிய மரபணு ஆராய்ச்சியை பின்நோக்கி செய்வதாகும்." தொடர்ந்து...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.