(Reading time: 18 - 36 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

" சரி பேசு" என்றான்.

"வாழ்க்கை என்பது ஒரு பயணம் போல…"

'தத்துவமா…' என்று நினைத்தவன்..

" ஆமாம் இருக்கட்டும்என்றான்.

"அந்த பயணத்தில் நம்முடன் யார் யார் வருவார்கள் என்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது"

" சரி"

"நம் உடன் வருபவர்கள் அனைவரும் நம்முடைய பயணம் முழுவதும் நம்முடன் வருவார்கள் என்று சொல்ல முடியாது"

" ஆமாம்…  சொல்ல முடியாது'

" சிலர் மட்டுமே கடைசி வரை நம்முடன் பயணிக்கலாம் "

"இருக்கட்டும்"

" அவர்களில் சிலரிடம் மட்டுமே நாம் அன்பையும் நட்பையும் வெளிப்படுத்த முடியும்."

" ஓகேஃபேக்ட்.. ஃபேக்ட்டு…"

"இப்போது நீங்களும் நானும் இந்த பயணத்தில் இணைந்திருக்கிறோம்"

" ஆமாம் உண்மை. அதுக்கென்ன?"

" இந்த பயணத்தில் நாம் உண்மையாக.. ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்."

" சரி"

" ஆதரவாகவும் இருக்கவேண்டும்"

" இருக்கலாம்"

"எனவே…"

"எனவே…?"

"இதுவரை நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து விடுவோம். இனி நான் உங்களுக்கு ஆதரவாக துணையாக இருப்பேன் என்று சொல்ல விரும்புகிறேன்"

" சரி"

" ஏதாவது உங்களுக்கு உதவி தேவை என்றால் என்னிடம் கேட்கலாம்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.