(Reading time: 14 - 28 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 35 - ஜெய்

Hope all of you are safe.... அப்பாடா ஒரு வழியாக கதையை முடித்துவிட்டேன்.... இதுவரை இந்த கதையுடன் பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... ஏகப்பட்ட ஓட்டை விட்டுருக்கேன்னு தெரியுது... குறைகள் இருந்தால் கண்டிப்பா சொல்லுங்க... அடுத்த தடவை அதை நிவர்த்தி செய்துவிடுகிறேன்... சக்தி, காயத்ரி தனிக் கதையா தந்துடறேன்... இங்க அவங்களை நிறைய கூட்டிட்டு வர முடியலை... அடுத்து அவங்க கதையா இல்லை வேற கதையா தெரியலை... கொரோனா வச்சு வாங்குது... எதையும் யோசிக்கவே முடியலை... அப்டேட் அடிக்கும்போது எனக்கே நிறைய நேரம் ரொம்ப ஸோ ஸோவா இருக்கும்... பாவம் நீங்கள்லாம் எப்படி படிச்சீங்களோ.... Anyway thanks for your support friends.... எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் chillzeeக்கும் நன்றிகள் பல... இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய கதையுடன் சந்திக்கிறேன்.... Stay safe friends

தியும், சந்திரனும் மாறிமாறி கல்லூரியில் நடந்த விஷயங்களை கூற பத்திரிக்கையாளர்கள் வாயடைத்து அமர்ந்திருந்தார்கள்... என்ன கேள்வி கேட்க என்று கூட தெரியவில்லை...

“என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க... வந்த உடனே அத்தனை கேள்வி கேட்டீங்க... இப்போ கேட்க ஒண்ணும் இல்லையா...”

“சார், இத்தனை அட்டூழியங்கள் இவங்க பண்ணி இருக்காங்களான்னு வாயடைச்சு போய்ட்டோம் சார்... பத்திரிகை துறையில் இருக்கற எங்களுக்கு ஒரு இணுக்கு கூட இவங்களோட தீய செயல்கள் தெரிய வரலை...”

“அதுதான் அவங்க சாமர்த்தியம்... அதுவும் இல்லாம எல்லா இடத்தில இருந்தும் அவங்களுக்கு கிடைத்த மறைமுக ஒத்துழைப்பு...”

“சார் உங்களுக்கு முதல் முதல் எப்படி இவங்க மேல சந்தேகம் வந்தது.. யாரேனும் கம்ப்ளெயின்ட் கொடுத்தாங்களா...”

“உங்க மாதிரி ஒரு பத்திரிக்கையாளர்தான் இந்த கேஸ்க்கு பிள்ளையார் சுழி போட்டவர்... கிட்டத்தட்ட ஐந்து வருஷம் முன்னாடி ----- பத்திக்கையில் வேலை செய்த நிருபர் எரித்துக் கொல்லப்பட்டாரே நியாபகம் இருக்கா... கிட்டத்தட்ட என்பது சதவிகித தீக்காயங்களோட மூன்று நாட்கள் போராடி உயிர்விட்டார்...  அவர் இறக்கும் முன்னாடி திரு. நரேந்திரன் மருத்துவமனைல நடக்கற உறுப்புத் திருட்டு பற்றி அங்க இருந்த மருத்துவரிடம் சொல்லிட்டு எப்படியாவது இந்த விஷயத்தை என்னிடம் சொல்லுமாறு சொல்லிட்டு இறந்துட்டார்... அந்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு அந்த நிருபர் சொன்னதை சொன்னார்... அதிலிருந்துதான் இந்த வழக்கை ஆராய ஆரம்பித்தோம்...”

“மதி சார், இந்த வழக்கில் அயல் நாடுகளும் ஈடுபட்டிருக்குன்னு சொன்னீங்க... அவங்களையும் கைது பண்ணியாச்சா...”

“ஆமாம் இவங்களோட தொடர்புள்ள வெளிநாடுகள்ள இருக்கறவங்களையும் அந்த நாட்டு அரசாங்கம் மூலமா கைது பண்ணியாச்சு... ஆனா வெளிப்படையா இந்த வழக்குன்னு தெரியாது.... அவங்க மேல வேறு விதமான குற்றம் சாற்றப்பட்டிருக்கும்.... இன்னும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவங்க நிறைய பேர் இருக்கலாம்... இங்க இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அவங்க எல்லாரையும் களை எடுக்கும் வரை நாங்க கவனமா இருக்கணும்....”

“இப்போ இவங்க கைதானதினால அவங்க உஷார் ஆகா வாய்ப்பிருக்கே....”

“கண்டிப்பா... அதுதான் எங்களுக்கும் வேணும்... ஓவர் கவனமா இருக்கும்போதுதான் நிறைய தப்புகள் செய்யவும் வாய்ப்பிருக்கு.... ஸோ சீக்கிரம் மத்தவங்களும் மாட்டுவாங்க... எங்க கண்காணிப்பையும் இன்னும் விரிவுபடுத்தி இருக்கோம்.....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.