(Reading time: 14 - 28 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

;

திருடுவதற்கா...”

“இல்லை இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக இருந்தது... அவர்களை ஹிப்னாடிசம் செய்து தங்கள் நிலை மறந்து இருக்கும்போது நாட்டை விட்டு அனுப்புவதாக இருந்தது... அதற்குள் நாங்கள் காப்பாற்றிவிட்டோம்....”

“இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் பெரிய இடத்தில் இருப்பவர்கள்... வழக்கு நேர்மையான முறையில் நடைபெறுமா...”

“கண்டிப்பாக இதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நாங்க எதிர்பார்க்கிறோம்... இவர்களைப் போல் உள்ளவர்களைப் பற்றி மக்களுக்கு தோலுரித்து காட்டுங்கள்... உண்மை நிலை வெளியில் வந்தால் அவர்களுக்கு யாராலும் வெளிப்படையாக உதவ முடியாது...”

“பல வழக்குகள் இப்படி எல்லாம் தோலுரித்து காட்டிய பின்பும் இன்னும் தூங்கிக் கொண்டுதானே இருக்கிறது... உதாரணத்திற்கு பல வழக்குகள் சொல்லலாமே... கட்சி ஆட்கள் சம்மந்தப்பட்டிருந்தாலே அந்த வழக்கு பிசுபிசுத்துத்தானே போகுது.... இந்த வழக்கிலோ மாநில அரசு, மத்திய அரசு என்று எல்லாரும் ஈடுபட்டிருக்காங்க....”

“இந்த வழக்கு அப்படி ஆகாமல் இருப்பது நம்ம எல்லார் கையிலும்தான் இருக்கு... இதைப் போன்ற வழக்குகள் வரும்போது அதற்கு தீர்ப்பு வரும்வரை அதன் சூடு குறையாமல் மக்கள் மத்தியில் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களை மாதிரி மீடியாக்களின் வேலைதான்.... நீங்கள் என்ன செய்கிறீர்கள் அந்த நேரத்தில் எது சூடான செய்தியோ அதை எடுத்துக்கொண்டு முக்கியமானதை விட்டுவிடுகிறீர்கள்....

உதாரணத்திற்கு பொள்ளாச்சி வழக்கையே எடுத்துக்கொள்ளுங்கள்... பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்... மீடியா, மற்றும் பல அமைப்புகளின் அழுத்தத்தால் குற்றத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது... ஆனால் பிறகு நடந்தது என்ன... பல பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வந்தார்கள்... அந்த சூடு ஆறாமல் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு நிரந்தரத் தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம்... ஆனால் அப்படி இல்லாமல் அடுத்த சென்சேஷனல் செய்திக்கு நீங்கள் தாவி விட்டதால் அந்த வழக்கின் தன்மையே மாறிவிட்டது.... புகாரளித்த பெண்களுக்கு வந்த மிரட்டல்களால் அவர்களும் பின் வாங்கிவிட்டார்கள்.... மறுபடியும் இப்பொழுது காசி என்பவன் அதே போல் பெண்களை எமாற்றும்போதுதான் விழித்துக்கொண்டு மீதும் பொள்ளாச்சி சம்பவமா என்று பேச ஆரம்பிக்கிறீர்கள்....

இந்த வழக்கை அந்த நிலைமைக்கு கொண்டு வந்து விடாமல் வழக்கின் தீர்ப்பு வரும்வரை குறைந்தபட்சம் ஒரு நிமிட செய்தியாகவேனும் தினம் பேசுங்கள்.... ஏனெனில் இது சாதாரண

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.