(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 33 - சாகம்பரி குமார்

திரதனையும் வைத்தியரையும் தேடிக்கொண்டிருந்த கும்பலுக்கு தாதிப்பட்டியில் அதிரதனுக்கு இருக்கும் தொடர்பு தெரிந்தது. அந்த முகவரியை தேடிக் கொண்டு கிளம்பினர்

'இந்த முறை அவன் தப்பிக்க முடியாது. அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறானோ அதனை அப்படியே அழித்துவிட்டு அவனையும் அந்த வைத்தியரையும் அழித்துவிட்டுதான் வருவோம்' என்று சூளுரைத்து கிளம்பியது அந்த கும்பல்.

ஆள் அரவமற்ற அந்த மலைப் பாதையில் அமைந்திருந்த கிருபாவின் வீட்டிற்கு அருகில் அவர்கள் எளிதில் சென்று விட்டனர். மொத்தம் நான்கு பேர்... அதற்கு தலைமை தாங்கிய ஒருவனையும்  சேர்ந்து நான்கு அடியாட்கள். அவர்களை அனுப்பியவன்  அவர்களை  வெளியில் இருந்து அந்த இடத்தை நோட்டமிட்டு விவரம் தெரிவிக்க சொன்னான்தாக்குதலை ஆரம்பிக்கும் முன் அங்கு யார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

க்ருபா வீட்டிற்கு வெளியே பதுங்கி இருந்து நோட்டமிட்டனர். ஆள் நடமாட்டத்தை வைத்து மூன்று பேர் அங்கு இருப்பதை கண்டு பிடித்தனர்வயதான க்ருபாவை வைத்தியர் என்றும்வினயை அதிரதன் எனறும்தவறாக புரிந்து கொண்டவன் அலைபேசியை எடுத்து தகவல் அனுப்பினான்.

"ஜேக் சார். இங்கே அந்த வைத்தியனும், ஆராய்ச்சியாளனும் இருக்காங்க. போட்டு தள்ளிட்டு போட்டோ அனுப்பவா"

"அந்த ஸ்பெஸிமன் அங்கே இருக்கணுமே. பார்த்தாயா"

"அப்படி ஒண்ணும் தெரியல. வீட்டு ஜன்னல்வரை சென்று வேவு பார்த்துட்டேன். ஒரு பொண்ணு இருக்கு. ஆனால் அதை பார்த்தா வியாதிகாரி மாதிரி தெரியலபளபளன்னு இருக்கு"

"ஸ்டுப்பிட்அந்த பொண்ணுதான் ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கும். க்யூர் ஆகிட்டு இருக்கும்."

"சரி.. அதையும் போட்டு தள்ளிடறோம்.. ஓகேதானே" அவன் அனுமதிக்காக காத்திருந்தான்.

கணநேரத்தில் ஜேக்கின் மூளை துள்ளியெழுந்தது…

"வெயிட்இந்த அதிரதனை ஒரு கரப்பான் பூச்சினு நினைச்சேன். ஆனால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.