(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"அதுக்கு விளக்கம் தர்ற முடியாது. ஒரு பேச்சுவாக்குல வந்திடுச்சு…"

"அப்படியே தாண்டி போயிடலாமா?" குரல் கடினமுற கேட்டாள்.

"அப்படியே பிடிச்சு வச்சுக்கோன்னு சொல்றேன். இது போல நிறைய வரும்மனசுல இருந்துவிளக்கம் தேடாமல் உனக்கா புரியும்போது பதில் சொல்லு…"

"டேய்.. என்னோட விளையாடாதே…"

"நோ டாஅப்படி பேசக்கூடாது"

"நீ ஏன் அப்படி பேசணும்என்னுடைய மனநிலையை டெஸ்ட் பண்றியா…?.'

"இல்லைஐ மீன் இட்"

"'இட்' ?... அது நான்தான்இப்பதான் என்னை அபின்னு சொல்றாங்க. நான்  ஒரு காலத்துல இருட்டுல காட்டுக்குள்ள மரம் விட்டு மரம் தாவிமுள்ளுசெடியில காயம்பட்டுமறைந்து மறைந்து ஓடிக்கிட்டிருந்த 'அது'."

"டார்ஜான்  கதையில ஹீரோவே உன்னை மாதிரிதான். உனக்கு படிக்க பேச தெரிஞ்சிருக்கு... என் கதையில நீதான் ஹீரோயின்அன்புபாசம்வீரம்நேர்மை அத்தனையும் உங்கிட்ட இருக்கு"

"ஆமாஹீரோயினா… ! என்னை வச்சு கலர் படம் எடுத்தால் கூட கறுப்பு வெள்ளை படமான்னு கேட்பாங்க. எங்கிட்ட இப்படி பேசி டயத்தை வேஸ்ட் பண்ணாதே. நாலு நாள் பக்கத்துல உட்கார்ந்து பேசினால் கண்ணு மண்ணு தெரியாமல் காதல் வந்திடுமா?.

" உன்னை பார்க்கறதுக்கு முன்னேயே நான் முடிவெடுத்துட்டேன். அதை மாற்ற முடியாது"

"நீ என்ன லூசாஎனக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. அது வெற்றி அடையுமான்னு அவங்களுக்கே தெரியாது. நான் பழையபடிஅது என்னவோ ஒண்ணு சொல்வாங்களேம்.. ஹோலோ…  ஹோலோக்ராம் போலவே இருக்கவும் செய்யலாம்இப்பவே  உளறிட்டு இருக்க"

"இப்பதான் சொல்லணும். சிகிச்சையோட முடிவு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்நான் முடிவு பண்ணிட்டேன். நீ இவ்வளவு யோசிக்க வேண்டாம் அபி..  காதல்ங்கறது ஒரு ஃபீல்அது உங்கிட்ட எனக்கு கிடைச்சிருக்கு. வருங்காலத்துல நீ எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.