(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பாதுகாத்தாக வேண்டுமே... வைத்தியரை அப்பா பத்திரமாக பார்த்து கொள்வார். அவசரமாக அவருக்கு அழைப்பு விடுத்தான். விசயத்தை சொல்லி கங்காதரனை அலர்ட் செய்தான். உடனே க்ருபா அங்கிள் வீட்டிற்கு கிளம்பினான்.

அந்த சமயத்தில்,

"அழித்தல் ஆக்கல் எல்லாம் கடவுள் வேலை. நீங்க அதில் தலையிட வேண்டாம். அவர் வாழ்க்கையை உருப்படியாக வாழப்பாருங்க"

அதிதி கோபமாக வினயையும் அபியையும்  கண்டித்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அவள் போனபின் கிளுக்கிட்டு சிரித்த அபி,

"பாட்டி மாதிரி பேசுறா.. நியாயம் தர்மம் எல்லாம் தானா ஓடி வராது. யாராவது ஒருத்தர் அதை காப்பாத்துனாதான் உண்டு  "

"இல்லையா பின்னேஉன்னை மாதிரி சில பேர் அதுக்குனே பொறந்து வந்திருக்காங்க"

"கரெக்ட்பா…"

"பிரச்சினை என்னன்னா…  காப்பாத்துற படலம் ஓவர் டோஸாயிடுமேங்கறதுதான்"

"அப்படினா…"

"தீயில் சிறியது பெரியது என்று உண்டோ.. அத்தனையும் அழிப்பது ஒன்றே  அதன் நோக்கம்

"இருஇரு இதை நீ எங்கிருந்து காப்பி அடிச்சேன்னு சொல்றேன். பாரதியார் கவிதையாதான் இருக்கும். சரியா?"

"ஆமாம்மா சரிதான். - தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோஅவனவன் சினிமா பாட்டை பாடியே காதலியை கவிழ்க்கறான். அதுங்களும் உண்மை தெரியாமல் சொந்த கவிதையானு குளிர்ந்து போகுதுங்க. எனக்கும் வந்திருக்கே பாரு.."

"ஹாஹ்ஹா.. உன்னோட தமிழ் புலமையை நாலே நாள்ல தெரிஞ்சுகிட்டேன். நான் க்ரேட்ல.. என்னை யாரும் ஏமாத்த முடியாது..'

"ஏமாத்த மட்டுமில்ல எதிர்க்கவும் முடியாது. என்னா அடி…!"

"அந்த பயம் இருக்கட்டும்ஆமாம்இப்பதான் கவனிச்சேன். இடையில காதலி கத்தரிக்காய்னு ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சுஎன்ன விஷயம்?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.