(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"அவருக்கு ஏதும் ஆபத்து வருமா?"

"எதுவும் வராமல் நான் பார்த்துக்குவேன் அதிம்மா" க்ருபா சொல்ல,

"அவரை இங்கே வர வேண்டாம்னு சொல்லலாமே"

"கங்காதரன் சார் போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டாறாம்போலீஸ் வரும்வரை நாம ஜாக்கிரதையாக இருக்கணும்."

" நாம அபிக்காவை ஒளிச்சு வச்சிடுவோம்."

" கரெக்ட்அவங்க வேற தனியா ஸ்டண்ட் பண்ணுவாங்க. அவங்களோட ட்ரீட்மெண்ட் பாதிக்கப்படலாம்." வினய் சொன்னான்.

"அக்கா இருக்கும் அறையை சாத்திவிட்டு பீரோபுக் அலமாரியை அங்கே நகர்த்தி வச்சிடுவோம். அவங்க இங்கே வந்தாலும் நாம அவங்க தேடுற ஆளுங்க இல்லைன்னு சொல்லுவோம்"

"உங்க அக்கா இதுக்கு ஒத்துக்கணுமே"

"அக்காவை முதலில் செஞ்சதுபோல ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டு மூலிகை நீரில் மூழ்கி இருக்க வைப்போம். வைத்தியர் அப்படி செய்ய சொன்னார்னு சொல்லிடுவோம்"

"அந்த மாபியா கேங் வந்தாலும் நாம் வேற யாரோ மாதிரி இருந்துக்குவோம். நீ க்ருபா அங்கிளை அப்பானு சொல்லுநான் அவரோட உதவியாள்அங்கிள் இங்கே வனவுயிர் பற்றி ஆராய்ச்சி செய்யறாருன்னு சொல்லுவோம்" வினய் ஒரு  கதையை உருவாக்கினான்.

""ஹாங்இது சரியா இருக்கும். வா நாம அபிக்கா  வேலையை பார்ப்போம்."

"நானும் வர்றேன். முடிஞசவரை பிரச்சினை வராமல் பார்த்துக்கறதும் நல்லதுதான்." சொல்லியபடி க்ருபா வந்தார்.

அபியின் அறைக்க சென்ற அதிதி அபியை நீருக்குள் மூழ்க வைத்தாள். அபி மயக்க நிலைக்கு செல்லகதவை தாளிட்டாள்.

பின்னர் வெளியே வந்து திட்டமிட்டபடி புத்தக அலமாரியை நகர்த்தி அறை கதவை மறைத்து வைத்தனர். வினய் அதிரதனுக்கு 'கால்' செய்தான்.

"பாஸ் நீங்க இங்கே வரத்தேவையில்லை. நாங்க மேனேஜ் பண்ணிக்குவோம்." என்று சொல்லி அவர்கள் செய்த ஏற்பாட்டை விளக்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.