(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

ஆராய்ச்சியாளர் இதுதான் அந்த வியாதிகார பொண்ணு" என்று சொன்னான்.

"முட்டாளேஇது அவங்க இல்லை. நான் உனக்கு அனுப்புன போட்டோவை நீ பாக்கவே இல்லையாஇவன் அதிரதன் இல்லை. இவன் வேற யாரோ.   நீ ஏதோ தப்பா பார்த்துட்டு என்கிட்ட உளறி கிட்டு இருக்கே" என்று அவனைக் கடிந்து விட்டு வினயின் பக்கம் திரும்பியவன்,

"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?." என்று கேட்டான்.

" நீங்கள் யார் "

"நான் இந்த காட்டு வழியாக வந்து கொண்டு இருந்தேன். இப்பொழுதுதான் இந்த வீட்டை பார்த்தேன்இங்கு யார் வசிக்கிறார் என்று யோசித்தேன். அதை தெரிந்து கொள்ள கேட்கிறேன்" என்று அமர்த்தலாக பதில் சொன்னான்.

 அவன் பொய் சொல்வதை புரிந்து கொண்ட வினயும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு,

" சார் நாங்க இங்க ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். என்னோட ப்ரொஃபஸர் ஆராய்ச்சியை எழுதிகிட்டு இருக்காரு. அவருக்கு உதவியாக நான் இருக்கேன். இவங்க அவரோட மகள்" என்றான்.

"என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் ?"

"இங்கேதான் காட்டுவாசிகளின்  காட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது…  பழங்கால காட்டுவாசிகள் எப்படி வசித்தனர் என்பதே அவர் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சரித்திரப் பேராசிரியர்" என்றான்.

வினய் சொன்னதை நம்பியதால் தான் தவறுதலாக அந்த இடத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான்.

" மன்னிக்கவும். எனக்கு வேறு வேலை இருக்கிறது நான் சும்மா இங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள  வந்தேன் " என்று தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு திரும்பினான்.

அவனை அப்படியே செல்ல விதி விடவில்லை அவனை தடுத்து நிறுத்தியது. அவனுக்குள் திடீரென்று எழுந்த ஒரு எண்ணம் செயலாகியதுஅவன் வினயிடம் திரும்பி,

" உங்களுடைய புரொஃபஸரை  நான் பார்க்கலாமா" என்று கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு கிருபாவின் அறை பக்கம் திரும்பிய வினய்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.