(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இப்படியேகூட இருக்கவும் விதிக்கப்படலாம். வாட் எவர்நான் உங்கூட  இருப்பேன்"

"ஏன்?"

"ஒரு காரணம் மட்டும்தான்னு  சொல்ல முடியாதுஆல் டு கெதர்நான் ரொம்ப தனியா வாழ்ந்திட்டேன் அபிமனசாலவும்நீயும் அப்படிதான்நாம ஒருத்தருக்கொருத்தர் துணையாக இருக்கலாமே.. அதுக்கு காதல்கல்யாணம்கணவன் மனைவிஎப்படி வேண்டுமானாலும் உருவம் கொடுத்துக்கலாம். எனக்கு தேவை ஒரு நேர்மையான உறவு.. அது உங்கிட்ட கிடைக்கும்ணு நம்பறேன்."

"அதை ஏன் இப்போது சொல்றே"

அதற்கான பதிலை அவனால் வாய்விட்டு சொல்ல முடியவில்லை. அது அவனுக்கும் அதிரதனுக்கும் க்ருபாவிற்கும்  மட்டுமே தெரிந்த ரகசியம்.

அது  அபியின் இதயம் தொடர்புடையதுஅவள் காட்டில் சண்டையிட்டு வந்த நாளில் இருந்து அவளுக்கு மூச்சிறைப்பதாக க்ருபா சொல்லியிருந்தார். அதற்கான மருத்துவ பரிசோதனைக்குதான் நடமாடும் மருத்துவமனையை கொண்டு வந்தது. அபியின் இதயத்துடிப்பு குறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதயதுடிப்பை கன்டரோல் செய்யும் நியூரோடாக்ஸின் - நரம்பை பாதிக்கும் விஷம்- அவள் ரத்தத்தில் இருந்தது. இதயதுடிப்பை ஏற்படுத்தும்  நியூரோ ட்ரான்மீட்டர் எனப்படும் கடத்திகள் செயல்படவில்லை. அவளுடைய இருதயம் உறக்கத்தில் இருந்தது . அதை சரி செய்தால் அவள் உயிர் வாழ முடியும். அதற்கான சிகிச்சை இனிமேல்தான்  ஆரம்பிக்கும். அபியை இப்போது அன்பும் கவனிப்பும் மட்டுமே சீரான உடல்நிலையில் வைத்திருக்கும். அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான்.

அவன் மௌனமாக இருக்கவும் அபி கேட்டாள்.

"என்னோடு கோபத்தை குறைக்க இப்படி ட்ராமா போடறியா?"

"என்ன கோபம்?. அந்த ஜேக் பற்றி சொல்றியா?. தேவைபட்டால் நானே அவனை அழிக்கும் வேலையை செய்வேன். அநியாயத்தை தண்டிக்கற கோபம் எனக்கும் வரும் அபி"

அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. அதிரதன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.