(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"பாஸ்இங்கே ஒண்ணும் பிரச்சினை இல்லை. எல்லாம் ஓகே"

"பிரச்சினை இனிமேதான் வருகிறதுவைத்தியர் சந்தேகப்பட்டது சரிதான் அந்த மெடிக்கல் மாபியா எங்கிட்ட பேசினான்."

"வாட்.. என்ன சொல்றீங்க பாஸ்" என்றவன் அபியிடம் சைகை செய்து விட்டு அவ்விடம் விட்டு வெளியே வந்தான்.

"என்னாச்சு பாஸ்?"

" அவன் அங்கே வந்திட்டு இருக்கான். அத்தனையையும் அழிக்க போறேன்னு சொன்னான். அவன் ஒரு லூசு கிறுக்கன்எதை வேண்டுமானாலும் செய்வான். அதிதியை நோயாளின்னு நினைச்சிட்டு வர்றான். ஜாக்கிரதையாக இரு. நான் அங்கே வர்றேன்"

"நான் பார்த்துக்கறேன் பாஸ்அவங்களுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கறேன்." அலைபேசியை அமைதிபடுத்திய வினய் யோசித்தான்.

 க்ருபா சாரிடம் இந்த விசயத்தை சொல்ல வேண்டும். உடனே அவரிடம் சென்றான். அங்கே அதிதியும் இருந்தாள். அவர்களிடம் விசயத்தை சொன்னான்.

"ராஸ்கல் யாரவன்வரட்டும் பார்த்திடலாம். என் பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா உயிரை எடுத்திடுவேன். என்னோட துப்பாக்கிக்கு வேலை வந்திடுச்சு"

"துப்பாக்கி வச்சிருக்கீங்களா?" வினய் கேட்டான்.

"லைசன்ஸோட வாங்கி வச்சிருக்கேன். போட்டு தள்ளிடுவேன்"

"சூப்பர்உடனடியா நாம ப்ளான் பண்ணனும்"

"அவங்க எதுக்கு நம்மை தேடி வர்றாங்க?" அதிதி வினவினாள்.

"அது ஒரு யுத்தம் அதிதி. வியாபார யுத்தம்அவங்களோட போலியான சாம்ராஜ்யத்தை அழிச்சிடுவோம்னு நினைச்சு நம்மை அழிக்க வர்றாங்க. புற்றுநோய்க்கு மூலிகை மருந்து கண்டு பிடிக்கறோம்னு பயப்படறாங்க." வினய் விளக்கினான்.

"ஆனால் நாம அப்படி செய்யலையே"

"அது அவங்களுக்கு தெரியாது. பாஸ் தன்னோட ரிசர்ச்சை தொடரறாருன்னு நினைக்கறாங்க"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.