(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"தேடி வந்த ஆளுங்க நாங்கள் இல்லைன்னு நம்பி அவன்க திரும்பி போயிடுவான்கநீங்கள் வநதால் சுதாரிச்சிடுவாங்க."

"இல்லைவினய்அவனை விடக் கூடாது. ஜெனிட்டாவின் மரணத்தை அவ்வளவு சுலபமாக என்னால் கடந்து போக முடியாது."

"அபியை பற்றி யோசிங்க பாஸ்இந்த முறை விட்டுடலாம். திரும்பி கண்டிப்பாக உங்களை தேடி வருவாங்க. அப்போது பார்த்துக்கலாம்"

"வினய்…."

"பாஸ்இப்போது அபியை காப்பாற்ற வேண்டும்"

"ஓகேநான் வரலை. தாதிபட்டிவரை வந்துட்டேன். தலைவரை பார்த்துட்டு திரும்பிடறேன். நீ அவன் வந்து போனதும் சொல்லு" என்றான்.

"சரி பாஸ்என்று சொல்லி போனை வைத்துவிட்டு அதிதியை பார்த்து,

"அதிதி பாஸ் இங்கே வர வேண்டாம்னு சொல்லிட்டேன். நீங்க அமைதியாக இருங்க" என்றான்.

"ரொம்ப தேங்க்ஸ் வினய்" என்று அதிதி முகமலர்ச்சியுடன் சொன்னாள்.

 அவளைப் பொறுத்தவரை இப்போதைக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று நினைத்தாள். அவளுடைய நோக்கம் அபியை முற்றிலுமாக குணப்படுத்த வேண்டும். அந்த சிகிச்சைக்கு எந்த குறுக்கீடும் வரக்கூடாது அதே போல இந்த சமயத்தில் அதிரதன் அடிதடி என்று இறங்குவதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் அவனை வர வேண்டாம் என்று தடை போட நினைத்தாள்.

ஒருவர் நினைப்பது போலவே மற்றவருடைய விதியும் நினைப்பது இல்லையே!   என்னதான் முயற்சித்து தடுக்க பார்த்தாலும் அந்த ஜேக்  தன்னுடைய அடியாள் கும்பலுடன் கிருபாவின் வீட்டை தேடி வந்தான்.

கிருபா தன்னுடைய அறையில் ஏதோ முக்கியமான வேலை இருப்பது போல அமர்ந்திருந்தார். ஹாலில் வினயும் அதிதியும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்உள்ளே வந்த ஜேக் அவர்களைப் பார்த்து,

" நீங்கள் யார்…  இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

 அப்போது அவன் அருகில் இருந்த ஒருவன் "பாஸ் இவன்தான் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.