அழித்திருக்க வேண்டும்." என்று கத்திக் கொண்டு அவனும் திரும்பி நிமிர்ந்தான்.
"ஒரு சின்ன குழந்தையோட வாழ்க்கையை அழிச்ச பாவி… நீ… நீ நிமிர்ந்து நிக்கிறியா?... உன்னை இந்த நிமிஷத்திலேயே அழிச்சுட்டு தான்டா மறுவேலை" என்று கத்தியபடியே கிருபா தன் அறையை நோக்கி திரும்பினார். அவருக்கு அந்த துப்பாக்கியை எடுத்து அவனை உடனே சுட்டுத் தள்ளவேண்டும் என்று கோபம் வந்தது.
க்ருபா அப்பொழுதுதான் ரவுத்திரம் கொள்ள பழகிக் கொண்டிருந்தார். ஆனால் ஜேக்கை பொருத்தவரை மூர்க்கத்தனம் அவனுடைய ரத்தத்திலேயே கலந்திருந்தது. அவரை விட விரைவாக அவனால் செயல்படும் முடிந்தது அருகிலிருந்த அடியாளிடம் கண்ணை காட்ட அவன் ஒரே நொடியில் பாய்ந்து சென்று கிருபாவை பிடித்துக் கொண்டனர்.
வினய் இந்த குழப்பத்தை உடனே கிரகிக்க முடியாமல் தடுமாறினான்.
" என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க"
"இவன் நான் தேடிவந்த என்னோட புது எதிரி கிடையாது. ஆனால் இது பழைய எதிரி. இவனை நான் உயிரோட விட மாட்டேன். நீ விலகிக்கோ…. உனக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவனை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டேன். நான் நாட்டை விட்டு ஓடி போயி அவமானபட்டு அசிங்கப்பட்டு போனேன். என்னுடைய நிலையை இந்த அளவுக்குக் கொண்டு வருவதற்கு ரொம்பவும் பாடுபட்டிருக்கேன்" என்றவன்,
"டேய்.. அவர்களை பிடித்து கட்டுங்கடா" என்று கட்டளையிட்டான். அந்த இடத்தில் சம பலம் இல்லாததால் கிருபா… வினயை அவனுடைய அடியாட்கள் எளிதாகப் பிடித்து விட்டனர். மேலும் அவர்கள் சண்டையை சந்திக்க தயாராகவும் இல்லை. பிரச்சனை சுமூகமாக முடிகிறது என்று அலட்சியமாக சற்று அலட்சியமாக இருந்து விட்டார்கள். அதனால் ஜேக்கின் கைக்குள் அவர்களுடைய கட்டுப்பாடு சென்றுவிட்டது.
"அன்னைக்கு தூக்கிட்டு போனியே அந்த பொண்ணு செத்துப் போய் விட்டாளா?" என்று ஜேக் கிருபாவை பார்த்து கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் கிருபா முறைத்தார். சட்டென்று நடந்து மாறிவிட்ட சூழ்நிலையில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவருடைய