(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வேகத்தில் அங்கிருந்த அத்தனை அடியாட்களையும் கைகளால் தூக்கி எறிந்து பந்தாடினாள். ஆளுக்கு ஒரு திசையில் போய் விழுந்தனர்.

அபியின்  இந்த திடீர் பிரவேசத்தை எதிர்பார்க்காத ஜேக் தடுமாற…  சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்த அந்தி வேளையில் அவளுடைய உருவமும் அவனை பயமுறுத்தியது.

"நீ…  நீ யார்?"  என்று அதிர்ச்சியாக கேட்டான்.

" நான்தான் ஸ்பெசிமன் பொண்ணு. உன்னால வாழ்க்கையை இழந்து அனாதையாக திரியிற நான்தான் இப்பொழுதுஉன்னை அழிக்கப் போகிறேன்" என்று அவன் அவன் கழுத்தை பிடித்தாள்.

"அபி நீ இந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்" வினய் கெஞ்சினான். அவளுடைய இருதயம் இந்த ஆக்ரோஷத்தை தாங்குமா? என்று பதறினான்.

"இவனை நானே கொல்லணும். இவன் ஒரு மிருகம். இவன் நல்லவைகளை செய்ய விட மாட்டான்."  ஜேக்குடைய கழுத்திலிருந்து பிடியை தளர்த்தவே இல்லை.

அதற்குள் க்ருபாவின் அருகில் விழுந்திருந்த ஒருவன் சுதாரித்து  கிருபாவின் கழுத்தில் கத்தி வைத்தான்.

"ஏய்பிசாசுஅவரை விடு. இல்லைனா இவனை போட்டுறுவேன்"

இதை எதிர்பாராத அபி ஒரு நொடி நிதானித்தாள். 'இப்போது ஜேக்கை விட்டு விட்டால் அனைவரையும் அழித்து விடுவான்விடவில்லை எனில் கிருபா மாமாவை அந்த தடியன் கொன்று விடுவான்என்ன செய்வது?' என்று தடுமாறினாள்.

அபியின் கால்களில் கட்டு இருப்பதை உணர்ந்த ஜேக்… அவள் தாமதித்த  இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு காலை தாக்கி அவளை   கீழே சாய்த்தான். அபியின் கைகளில் ஏறி மிதித்தான். அதற்குள் மற்ற அடியாட்களும் அவளை பிடித்து கொண்டனர். கைகளை அனைவரும் இறுக பிடித்ததால் அபியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேற்கொண்டு அவளுடைய கைகளை எலெக்ட்ரிக் ஒயர் கொண்டு கட்டினர்.

"பேய் மாதிரி வேலை பார்க்கறஉனக்குதான் அவன் ட்ரீட்மெண்ட் செய்தானாஎன்னை அழிக்கணும் என்று வேகமாக இருக்கிறாயேஉன்னைதான் முதலில் அழித்தாக வேண்டும்." பாக்கெட்டிலிருந்து ஒருசிறிய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.