(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

முயற்சித்தான்.

உள்ளே சென்ற மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல. அபி தரையில் சுருண்டாள்.

ஐயோ… என்று க்ருபா அழுதார்.

"ப்ச்இது தாவரத்திலிருந்து எடுத்த விஷம். இதயத்தை சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல துடிக்க வைக்கும். ஆள் குளோஸ்"

"அப்புறம் அந்த அதிரதன் வரும்வரை காத்திருப்போம். அவனோட பொண்டாட்டி கதையையும் முடிச்சிட்டால் சந்தோசமாக இருக்கும்." அவன் அமர்ந்தான். அபியை பார்த்தவன்

"ஹேய் ஜெல்லி மீன்போல இருக்கற  இந்த ஸ்பெசிமனை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாமே. இவளை தூக்கி காரில் போடுங்கடாஎன்று குனிந்தான். அவளை தொடப்போனபோது காலை எதுவோ தாக்கியதுதீப்பிடித்தது போல வலி ஏற்பட்டது. துள்ளி குதித்து அபியின் அருகிலேயே கீழே விழுந்தான்.

"டேய்அபிக்காவை விட்டு நகர்ந்து நில்லுடா" என்று கத்தியவாறு துப்பாக்கியை இறுக பிடித்தபடி அதிதி நின்றாள். அது க்ருபாவின் துப்பாக்கி!

இடையில் மயக்கம் தெளிந்த அதிதி யாருடைய கவனத்திலும் படாமல் தரையில் நகர்ந்து சென்று க்ருபாவின் துப்பாக்கியை எடுத்திருந்தாள்.

"ஏய்" என்று ஜேக் கத்தும்போதுதிடுதிடுவென போலீஸ் உள்ளே வந்தது. கங்காதரன் அழைத்து வந்திருந்தார். அதிரதனும் சரியாக அங்கு வர ஜேக்கிற்கு விலங்கு பூட்டப்பட்டது. அவனையும் அடியாட்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போலீஸார்  கிளம்பினர். சோபாவிற்கு அந்த பக்கம் அபி மறைவாக இருந்ததால் போலீஸாரின் கண்களில் படாமல் அதிதி மறைத்து நின்றாள்.

க்ருபா வினயின் கட்டுகள் அவிழ்க்கப்படவும் அபியிடம் ஓடிப்போய் கதறினார்கள்.

"அபிக்கு விஷமுறிவு தர வேண்டும்ரதன் ஏதாவது பண்ணுங்க" என்று அதிதி கத்தினாள்.

அபியின் அருகில் இயலாமையுடன் அதிரதன் அமர்ந்தான். "பாஸ்அவங்க கார்டியோ டாக்ஸின் தந்துட்டாங்கஏதாவது செய்ங்கஅபியை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.