(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பாக்ஸிருந்த ஒரே ஒரு கேப்ஸ்யூலை எடுத்து காட்டினான்.

"இது நான் கண்டுபிடிச்ச வைரஸ்…  முதல்முதலா இவள்ட்ட டெஸ்ட் பண்ணிடுவோம். செத்து தொலையட்டும்"

"அதை செய்யாதேஅபியால் குணமாகவே முடியாது. அவளை குணப்படுத்தும் முயற்சிதானே செய்தோம்.. உனக்கு எதிராக எதையும் செய்ய வில்லை. அவளை விடு." என்று வினயும் கிருபாவும்  கதறினர்.

அவர்கள் பதறியதன் பின்னே ஒரு கொடுமையான பயம்  இருக்கிறது. அந்த மருந்தால்  அபியின் இதயத்தின் வலிமை இன்னும் குறையலாம். ஏற்கனவே  அவளுடைய  இதயம் மெல்ல செயலிழந்து கொண்டிருந்தது.

"இந்த மாதிரி ஒரு ஜந்து உயிரோட இருக்கறதே தப்பு. இது ஃபெயிலியர் ப்ராஜெக்டஇதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. நோ யூஸ்இதுக்கு கோபம்வேற வருதுஎன்னை கொல்லணுமாம்அட்டைபூச்சியை நசுக்கினால் கொலைன்னே சொல்ல முடியாது. இதால நிற்கவே முடியலைப்ச்இதை கொன்ற பெருமை எனக்கு வேண்டாம்…" சற்று நிதானித்தான்.

"ஆனால் அத்தனை பேரும் பதறீங்க. உங்களோட உயிர் கிளி இவதானா?... அப்ப போட்ற வேண்டியதுதான். டேய் வரது…  இவளை பிடித்து தூக்கி நிறுத்துடா. நான் செஞ்ச தப்பை நானே அழிச்சிடறேன்."

அவன் அருகில் இருந்தவன் ஒரு சிறிய பாட்டிலை எடுத்து நீட்டினான்.

"வைரஸ்லாம் வேண்டாம். பொழைச்சுக்குவா!.  இந்த விஷத்தை வாயில ஊத்துங்கஅது இதயத்துக்கு மரண அடி கொடுக்கும்."

இருதயத்தை பாதிக்குமா… அவன் சொன்னதை கேட்டு வினய் பதட்டமானான்.

"அதுவும் சரிதான்மெடிக்கல் மிரக்கிள் ஆயிட போகுது. நீயே முடிச்சுடு"

ஜேக் சொல்லவும் அபியின் அருகில் சென்ற அந்த முரடன்  அவளுடைய வாயில் மருந்தை கொஞ்சமாக  ஊற்றினான். இது போதும்...

"செத்து போ' என்றபடி ஜேக் அவளுடைய கண்களை பார்த்தான். அது அவனை உக்கிரமாக பார்த்ததுஅவளுடைய உதட்டில் கோபம் தெரிந்தது. கொஞ்சமும் பயம் இல்லை…!  அது அவனுடைய ஈகோவை சீண்டியது. அவளை மாறி மாறி அறைந்தான். அவள் முகத்தில் துப்பினான்.

"பூச்சிபூச்சி" என்று கத்தினான். அபியை மனரீதியாக பாதிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.