(Reading time: 14 - 28 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

;

“சார் இவங்க எப்படி இத்தனை வருஷமா வெளியுலகத்துக்கு தெரியாம இத்தனை தப்புகள்  பண்ணினாங்க.... அவங்களை பத்தி ஒரு கம்ப்ளைன்ட் கூட உங்களுக்கு வரலையா,,,,”

“அவங்க இதுல ஈடுபடுத்திய ஆட்கள் அந்த மாதிரி... அவங்க கல்விக்கூடங்கள்ள படிக்கிற கஷ்டப்படற மானவர்களை தேர்ந்தெடுத்து முதல் வருடத்துல இருந்து அவங்க கைப்பிடிக்குள்ள கொண்டுவந்துடறாங்க... பல துறைகளிலும் அவங்களை உள்ள நுழைச்சு விட்டுடறாங்க... அவங்க குடும்பத்தையும் இவங்க வட்டத்துக்குள்ள வச்சுக்கறாங்க... அபரிமிதமான பணம், குடும்பத்துக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயம் இது ரெண்டும் சேர்ந்து அவங்களை இவங்களுக்கு ஆதரவா வேலை செய்ய வைக்குது... அதையெல்லாம் மீறி இவங்க கைவிட்டு போறாங்கன்னு தெரிஞ்சா உடனேயே அவங்களை போட்டுத் தள்ளிட வேண்டியது.... அப்பறம் எங்க இருந்து விஷயம் வெளிய வர... அந்த பத்திரிக்கை நிருபரும் அப்படி மாட்டினவருதான்.... அவங்க விஷயம் தெரிஞ்சு எழுத கிளம்பினவுடனே போட்டுத் தள்ளிட்டாங்க....”

“விஞ்ஞானிகள் கைது பண்ணி இருக்கீங்களே... அவர்களுக்கும் நரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு....”

“கைதானவங்க மூணு பேருமே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துல உயர் பதவில இருந்தவங்க... அங்க விருப்ப ஓய்வு பெற்ற பின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரோட ஆய்வகத்துல சேர்ந்திருக்காங்க... வெளிநாட்டு விஞ்ஞானிகளோட தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இவர்களின் முதல் பணி....”

 

“சார் நீங்க செஞ்சிருக்கறது சாதாரண வேலை இல்லை.... கேக்கும்போதே மலைப்பா இருக்கு... ஆனா அதே சமயம் இப்படி காவல்துறை, மருத்துவத் துறை, அரசியல்ன்னு எல்ல இடமும் ஊழலா இருப்பதை நினைத்தால் வேதனையா இருக்குது...”

“ஹ்ம்ம் நீங்க சொல்லுறது ஒரு விதத்துல சரிதான்... எல்லாத் துறைலயும் ஊழல்வாதிகள் இருக்கத்தான் செய்யறாங்க... ஆனா அங்கயும் நியாய, தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் நல்லவர்களும் இருக்காங்க... இல்லன்னா எங்களால பத்து சதவிகித குற்றங்களைக் கூட கண்டுபிடிக்க முடியாது...

இந்த வழக்கையே எடுத்துக்கோங்க... நரேந்திரனின் மருத்துவமனைல  ஆரம்பிச்சு அரசாங்க மருத்துவமனை, காவல்துறை, சைபர் க்ரைம், CBCID, என்று பல இடங்களிலும் இருந்த நேர்மையான ஆட்களால்தான் இந்த வழக்கில் குற்றவாளிகளை எளிதா அடையாளம் காண

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.