(Reading time: 14 - 28 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

;

“அப்படித்தான் ஆரம்பிச்சாங்க சாரங்கா... பிறகு மதி போட்ட போடுல அப்படியே அடங்கி உக்கார்ந்துட்டாங்க.... அதுவும் கேஸ் பத்தி ஒரு ஒரு விஷயமா சொல்ல சொல்ல ஒருத்தரும் வாயே திறக்கலை...”

“சீனியர் இனிதான் நமக்கு வேலை அதிகமாகுது... வழக்கை எப்போ எடுக்கப் போறாங்க...”

“தெரியலை பாரதி... அவசர வழக்க எடுக்கணும்ன்னு காவல்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு மனு கொடுத்திருக்கோம்... இன்னைக்குள்ள தெரிஞ்சிடும்.... அப்பறம் சக்தி, சந்தியா உங்க ரெண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்... இந்த வழக்கிற்காக பல வழிகள்ள உதவி பண்ணி இருக்கீங்க...”

“அச்சோ சார் என்ன நன்றி எல்லாம் சொல்லிட்டு... நாட்டின் பிரஜையா எங்களால உதவ முடிஞ்சது சந்தோஷமா இருக்கு...”

“ஏம்மா சந்தியா... இப்போதான் அவங்களை பிடிச்சாச்சே .... இன்னும் அங்கேயே மாணவியா தொடரப் போறியா....”

“ஹ்ம்ம் ஆமாம் சார்... வேற வழியே இல்லையே... இந்த வழக்கு முடிஞ்சு இறுதி தீர்ப்பு வர்ற வரைக்கும் அங்க இருந்துதான் ஆகணும்... கல்லூரில ஒருத்தர் நம்ம சார்பா இருக்கறது அவசியம் இல்லை....”

“சந்தோஷ் நீங்க என்ன பண்ணப் போறீங்க...”

“நான் திரும்ப டெல்லி போறேன் சார்... இந்த ஆபரேஷன்க்கு ஸ்பெஷல்லா அனுப்பி இருந்தாங்க... இது ஓரளவு முடிஞ்சுட்டதால அடுத்த வேலை ஆரம்பிக்க வேண்டியதுதான்.....”

“என்ன சக்தி சந்தியா பார்த்து சிரிக்கறீங்க....”

“சார் சந்தியா இன்னும் பத்து வருஷம் கழிச்சு நீங்க மாணவியா நடிக்க சொன்னாக்கூட பண்ணுவா... ஏன்னா வயசு அப்படியே குறைச்சுட்டீங்க இல்லை.... டிகிரி முடிச்சவளை இல்லாத தகிடு தத்தம் எல்லாம் செய்து  போலி சர்டிபிகேட் வாங்கி மெடிக்கல் காலேஜ்ல சேர்த்து விட்டுட்டீங்க... பாருங்க நாலு வருஷம் அவ வயசுல குறைஞ்சு போச்சு....”

“உனக்கு ஏன் மாமா பொறாமை... அடுத்த வழக்குல வேணா உன்னை ஸ்கூல் பையனா அனுப்ப சொல்லுறேன்....”

“நீ எதுக்கு இதை சொல்லுறேன்னு எனக்குத் தெரியும்... என் காயு பேபியோட நடந்த கல்யாணம்  செல்லாதுன்னு சொல்லத்தானே... உன்னோட கேட்ட எண்ணம் முழுக்க மூஞ்சில தெரியுது....”, சக்தி கூற மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்....

“சக்தி ஜோக்ஸ் அபார்ட்... நிஜமாகவே நீ காயத்ரியை கல்யாணம் செய்த முறை சரியில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.