(Reading time: 14 - 28 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

;

அதற்கு என்ன செய்யப் போற...”, சந்திரன் கேட்க சக்தி மறுபடியுமா என்று தலையில் கை வைத்தான்....

“சார் இதுக்கு நான் எல்லார்க்கிட்டயும்  பெரிய விளக்கமா கொடுத்துட்டேன்... மறுபடியும் சொல்ல வைக்காதீங்க... எனெர்ஜி இல்லை... அவளுக்கு என்னை பிடிக்க வைக்கறதுதான் என்னோட அடுத்த டாஸ்க்....”

“சக்தி நேத்து அழுதுட்டே உன்னைப்பார்த்து ஓடி வந்ததை பார்த்தா அது உனக்கு பெரிய டாஸ்கா இருக்காதுன்னு நினைக்கிறேன்.... சீக்கிரமே உன் லவ்ஸ் ஓகே ஆகிடும்...”

“எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார்....”

“சந்தியா நீயும் கல்லூரியில் ரொம்ப கவனமா இரு... நாம பிடிச்சவங்க இல்லாம மேலும் சிலரோ, பலரோ இதில் இன்னும் ஈடுபட்டிருக்கலாம்... அவங்களையும் நாம பிடிச்சாகணும்.... யாரையும் விடக்கூடாது....”

“கண்டிப்பா மதி சார்.... என்னால முடிஞ்சவரைக்கும் நானும் கல்லூரில தீவிரமா கண்காணிக்கிறேன்....”

“சரி இப்போ எல்லாம் கிளம்பலாம்... மதி நீதிமன்ற நிலவரத்தை பார்த்து நாம அடுத்த வேலைகளை ஆரம்பிக்கலாம்...”,அனைவரும் விடை பெற்று கிளம்பினார்கள்...

மறுநாளில் இருந்து தினம் ஒரு செய்தியாக பத்திரிக்கைகள் வெளியிட மக்கள் நரேந்திரனையும், அவனுக்கு உதவியாக இருந்த மற்றவர்களையும் தூற்ற ஆரம்பித்தார்கள்... பல அமைப்புகளும் நரேந்திரனுக்கு எதிராக போராட ஆரம்பிக்க கட்சிகளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை...

நரேந்திரனின் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள்  வழக்கு முடியும்வரை அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.... அவர்களின் பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டன...

வழக்கு ஆரம்பித்து நீண்ட நெடிய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது... குற்றம் சாற்றப்பட்ட அனைவருக்கும் ஆயுள்தண்டனை  அளித்து நீதிமன்றம் தீர்பளித்தது....  இந்தியாவே திரும்பி பார்க்கும் தீர்ப்பாக அது அமைந்தது... கல்வியை வியாபாரமாக நடத்தும் பெரும் முதலைகளுக்கு விழுந்த சவுக்கடியாகத் தீர்ப்பு இருந்தது...

அதே போல் உறுப்புத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கும் மருத்துவத்தை சேவையாக இல்லாமல் தொழிலாக செய்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்த தீர்ப்பாக இருந்தது...

நீதியும், நேர்மையும் என்றும் வெல்லும் என்று மக்களுக்கு உணர்த்தும் தீர்ப்பாக அமைந்தது...

கல்வியை வியாபரமாக்காமல், பணக்கார முதலைகளின் அடிபொடிகளாக இராமல். அரசியல் சதுரங்கத்தில் சிக்காமல் தூய்மையான பாரதம் உருவாக நாம் அனைவரும் பாடுபடுவோம்...  

முற்றும்

Episode # 34

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.