(Reading time: 13 - 25 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

இப்ப சமையல் தான் ட்ரெண்டிங் தெரியுமா ? ”

சேனல் பேரென்ன?”

சகலகலா சௌமி  சேனல்  . . .  “ “எப்புடி?” என இல்லாத காலரை தூக்கிக் காண்பித்தாள் .

கேவலமா இருக்குபத்மினி  முகம் சொல்லாமல் சொன்னது .

அதை கவனித்தும் கவினிக்காதபடி “என்னோட  சேனல் உலகத்தோடு எட்டாவது அதிசயம். சௌமிக்கு சகலமும் அத்துப்படி “  ஜம்பம் காட்ட

அப்ப கத்திரிக்கா சாம்பாரையும் நீயே செய்திருக்கலாமே?” என எங்கு அடித்தல் சும்மா இருப்பாளோ அதைச் சொன்னாள் பத்மினி.

அது  .  . செய்யலாமே  . . எனக்கு தெரியாத என்ன? ” திணறியவளைக் கண்டு  சாரதாவும் சித்தியும் பெரியதாக நகைத்துவிட

நா சமைச்சா யார் ஷூட்  பண்றதாம்ஒருவழியாய் அசடுவழிந்து  சௌமி பதிலைச்  சொல்லி முடித்தாள்.  “அதுவும் இல்லாம நீங்க சமையல்ல கில்லாடி  . கிட்சென் குயின் ஆச்சேஎனப் பெரிய ஐஸ் கட்டியை பத்மினி  சித்தி தலையில்  வைக்க

அதில் உருகிப்போன சித்தி “ சரிசரி என்ன பண்ணனும்ச்  சொல்லுஎன மீண்டும்ச்  செய்யத்  தொடங்கினர்.

சௌமியின் ஐஸ் நன்றாக வேலைச்  செய்தது. ஒன்றிற்கு நான்கு தடவைச்  செய்ய வைத்தாள்.

ஷூட் பண்ணியாச்சா?”  கேட்டபடி சாவித்ரி வந்தார்.

ஆச்சுமாசௌமி டபுள் சந்தோஷமாய் பதிலளித்தாள் .

அப்பாடா இன்னிக்கி தப்பிச்சேன்என விரைவாக யெஸ் ஆகா பத்மினி  முனைய

பத்மினி  நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு   பிருந்தாவ பொண்ணு பாக்க வராங்க . . நீயும் வந்திடு  “ என பத்மினியிடம்    சாவித்ரி கூறினார்.

அப்படியாக்கா ரொம்ப சந்தோசம். கண்டிப்பா நாளைக்கு வரேன்எனச் சொல்லி வெளியே கிளம்புகையில் பிருந்தா வந்தாள்.

 “வா பிருந்தா இப்பதான் ஆபிஸ்ல இருந்து வரியா? உனக்கு ஒரு சந்தோஷ செய்தி காத்திருக்குஎனப் பூடகமாகச்  சொல்லி பத்மினிச்  சென்றுவிட்டாள்.

பிருந்தா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறாள். அம்மா சாவித்ரி அப்பா  இயற்கை எய்திவிட்டார். மூத்த சகோதரன் மூர்த்தி பண்ணநாட்டு நிறுவனத்தில் உயர்ப்பதவி வகிக்கிறான். அவன் மனைவி சாராத. ஒரே செல்ல தங்கை சௌமியா என்னும் சௌமி விஸ்காம் இறுதி ஆண்டு மாணவி. அழகான குடும்பம். ஒருவர் மேலொருவர் அதீத பாசம்க் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.