(Reading time: 13 - 25 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

கொண்டக் குடும்பம். 

 பக்கத்து வீடு பத்மினி சொன்னவற்றை  கேட்ட பிருந்தாக்   கேள்விக்  குறியோடு தாயை கண்டாள். அம்மா மகளின் கேள்வியை புரிந்தவளாக ஆமென தலையசைத்தாள்.

சௌமி “கங்கிராட்ஸ் அக்காஎன பிருந்தாவை கட்டிபிடித்தாள். சாரதாவும் மகிழ்ச்சியில் சேர்ந்துக் கொண்டாள்.

கங்கிராட்சா? இப்பதான் பொன்னே பாக்க வராங்க சௌமி இன்னும் கங்கிராட்ஸ் சொல்ல நிறைய ஸ்டெப்ஸ் போகணும்  “ என தங்கையை பார்த்தபடி கண்ணடித்து      “அயோ பாவம் எவன் என்கிட்ட மாட்டப்போறானோ?” என நக்கலாக பிருந்தா கூற

அக்கா செம்ம பார்ம்ல இருக்கஎன சௌமி கலாட்டாவில் இணைந்தாள்.

பிருந்தா புன்னகையோடு தன் அறைக்குச் சென்றாள். ஆடை  மாற்றி முகம் கழுவி ஹாலுக்கு வந்தாள். அம்மா கொடுத்த காப்பியை பருகினாள். அதற்குள் அவளின் அண்ணனும் வந்துவிட அனைவரும் சேர்ந்து மறுநாளைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஒரு பக்கம் சௌமியும் சாரதாவும் பிருந்தாவுக்கான அலங்காரம் பற்றிப்  பேச சாவித்திரியும் மூர்த்தியும் மற்ற வேலைகளைப் பற்றி கலந்தாலோசித்தனர்.

அப்போது வாட்சாப்பில் மாப்பிள்ளை  போட்டோ மற்றும் இதர விவரங்கள் வந்தன.

மாப்பிள்ளை பேரு தனுஷ்மூர்த்தி உற்சாகமாய் கூறி மற்றவரிடம் காட்டினான்.

பெயரை கேட்டதும் “ தங்க மாரி ஊதாரி பூத்துக்கீன  நீ நாறிஎன சௌமி பாடத் தொடங்கினாள்

ரவுடி பேபிஎன சாராத தொடர

“Why This kolaveri  Kolaveri di” மூர்த்தியும் கட்டை குரலில் பாடத் தொடங்க.

என் காதை  யாராவுது காப்பாத்துங்க   . . .  அயோ பாடாத அண்ணாஎன சௌமி தன் செவியை மூடி அவனை பயங்கரமாக கலாய்த்தாள்.  

இளையவர்கள் பிருந்தாவை கலாட்டா செய்வதில் குறியாக இருந்தனர்.  வீட்டில் வெகு நாட்களுக்கு பிறகு சந்தோஷம் நிலவியது. என்றும் இந்த மகிழ்ச்சி தங்க வேண்டுமென சாவித்ரி முருகனை வேண்டினாள் .

பிருந்தாவை கண்டார் இயல்பாக இருப்பது போல இருந்தாலும் அவளுள் வீசும் புயலை அவர் நன்கு அறிவார். தனக்கும் மகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் மனதில் வடுவாக உள்ளது.

சாவித்ரி கணவரை நினைத்து கொண்டார் “அவர் மட்டும் இப்பொது உயிரோடு இருந்தால் பிருந்தா வாழ்க்கை நிம்மதியாக இருந்து இருக்கும்இனி பழையவற்றை  நினைத்து பயனில்லை”   என மனதைத் தேற்றிக்கொண்டார்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.