(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

விசாலம் வீட்டிற்கு வேலைக்கு வந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. தமிழ்செல்விக்கு விசாலத்தை பிடித்திருந்தது. அவர் பரம்பரை பணக்காரராக இருந்தாலும் தன்மையாகவும், தன்னை விட இளையவளாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவளாக இருந்தாலும் மரியாதையாகவும் நடத்தினார். அவர் சொன்னது போல, காலையில் வந்தால் இரவு கிளம்பும் வரை அவருக்கு நேரத்திற்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பது, ஜூஸ் கொடுப்பது, அவருக்கு சிறிது பார்வை குறைபாடு இருந்ததால் புத்தகங்கள் படிப்பது, அவரின் கிராமத்தில் இருந்து விளைச்சலில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் அவரே பார்ப்பதால் அதற்க்கு உதவுவது என அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அவள் வந்த இந்த மூன்று நாட்களில் விசாலத்தின் பேரன்கள் இருவரும் வீட்டில் இல்லை. ஒருவர் கல்லூரி சுற்றுலா சென்றிருக்க மற்றொருவர் நண்பர்களுடன் ஏதோ ட்ரெக்கிங் பயணம் சென்றிருப்பதாக சொன்னார் விசாலம்.

மாலை பாக்கியம் செய்த சிற்றுண்டியை சாப்பிட்டபடி விசாலமும் தமிழ்செல்வியும் பேசி கொண்டிருந்தனர்.

தமிழ்செல்வி ஏதோ ஒரு நகைசுவை சொல்ல, அதற்க்கு பலமாக சிரித்து கொண்டிருந்தார் விசாலம்.

"அடடா என்ன வீட்டுக்குள்ள சத்தம் பலமா இருக்கு?" என்றபடி உள்ளே வந்தான் ஒரு இளைஞன். அவன் நேர்த்தியான உடையும் அவன் அணிந்திருந்த அந்த ப்ரெம்லெஸ் கண்ணாடியும் அவனின் சிவந்த நிறமும் அவனின் வசீகரமான புன்னகையும் அவனை அழகாக காட்டியது.

"வாடா வா உனக்கு இப்போ தான் இந்த வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா? இந்த பாட்டி இருக்கறனா இல்லையானு கூட பாக்கல...நீ எல்லாம் என்ன டாக்டர்?" என்றபடி அருகே வந்து அமர்ந்தவனின் முதுகில் ஒரு அடி வைத்தார் விசாலம்.

"ஷ்ஹ்ஹ் பாட்டி வலிக்குது. அப்பறம் அடிக்கலாம். இங்க உக்காந்திருக்கும் இந்த அழகான பொண்ணு யாருனு சொல்லவே இல்லையே..." அவரின் காதில் ரகசியம் பேசுவதை போல பாவனையில் சத்தமாகவே கேட்டான்.

"அடப்பாவி வந்ததும் வராததுமா பாட்டி உடம்பு எப்படி இருக்குனு கேக்காம இப்படி ஜொள்ளு விடறயே...படவா..."என அவன் காதை திருகியவர், "செல்வி, இவன் தான் என் பேமிலி டாக்டர், அசோக். என் மூத்த பேரன் கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன். முக்கால்வாசி நாள் இங்கயே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.