(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அவர்கள் பேசுவதை எல்லாம் அடுத்த அறையில் இருந்து கேட்டு கொண்டிருந்த இலக்கியா மனதில் நினைத்தாள், "இவள் படிப்பை எல்லாம் தொடருவது கனவிலும் நடக்காது என".

வழக்கம் போல காலை விசாலம் வீட்டை அடைந்தவள் வாசலில் புதிதாக நின்றிருந்த காரை பார்த்தாள். பாட்டியின் பேரன்கள் வந்துவிட்டார்கள் போல என்று எண்ணியபடி வீட்டிற்குள் சென்றாள்.

அவள் வீட்டிற்குள் நுழையும் போது யாரோ ஒரு இளைஞன் சாப்பிட்டு கொண்டிருக்க, விசாலம் அவனருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார். இவளை கண்டதும் "வாம்மா செல்வி. வா வா" எனவும் "குட் மோர்னிங் பாட்டி" என்றபடி அவரருகே சென்றாள்.

"ஹாய் நீங்க தான் தமிழ்செல்வியா? பாட்டி காலைல இருந்து உங்க புராணம் தான் பாடிட்டு இருக்காங்க. ஐ யாம் பரத்" என புன்னகையுடன் வலது கையை நீட்டியவன் அதில் சாப்பிட்டு கொண்டிருந்ததை உணர்ந்து சாரி என்றபடி இடக்கையை நீட்ட தமிழ்செல்வியும் புன்னகையுடன் அவன் கையை பற்றி குலுக்கினாள்.

"ஐ திங்க் பாட்டி உங்க பேன் ஆயிட்டாங்கனு நெனைக்கிறேன். உங்களை பத்தியே தான் பேசிட்டு இருந்தாங்க" என்றான் பரத். அவனக்கு பதில் சொல்லும் விதமாக புன்னகைத்தாள் தமிழ்செல்வி.

அவன் சாப்பிட்டு முடித்ததும் கல்லூரிக்கு கிளம்ப, விசாலம் தன்னுடைய அறையில் இருப்பதாக சொல்லவும் தமிழ்செல்வியும் பாட்டிக்கு ஜூஸ் கொண்டு வருவாதாக சொல்லி சமையலறையை நோக்கி சென்றாள்.

"குட் மார்னிங் பாக்கியம் அம்மா" தமிழ்செல்வியின் குரலில் திரும்பியவர், "வா பாப்பா, இதோ நீ சொன்னமாதிரியே மாதுளம்பழம் ரெடியா உரிச்சு வெச்சுருக்கேன். இந்தாம்மா" என்று அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் அதை அங்கிருந்த மிக்சியில் அடித்து ஒரு டம்பளரில் அதை ஊற்றி ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து கொண்டு வெளியே வரவும் எதிரில் யாரோ வேகமாக வரவும் சரியாக இருந்தது. அவள் கையில் இருந்த டிரே கவிழ்ந்து அந்த ஜூஸ் முழுதும் அவன் மேல் கொட்ட அவன் அணிந்திருந்த வெள்ளை நிற கோட் முழுதும் நிறம் மாறி போனது.

ஆறடி உயரத்திற்கும் மேலே இருந்த அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த தமிழ்செல்வி, "சாரி சார். தெரியாம...நான் நீங்க வரத கவனிக்கல" என அவனிடம் மன்னிப்பு கோர, அவன் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை கழற்றியவன் பார்வை அவள் மேல் சுவாரசியமாக பதிந்தது.  மேலிருந்து கீழாக அவளை அளவெடுப்பது போல பார்த்தவன் "ஹூ ஆர் யூ மிஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.