(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தான் இருப்பான். டேய், தடிப்பயலே இது தமிழ்செல்வி. இங்க இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கா. எனக்கு ஒரு கம்பெனி வேணும்னு நான் தான் வேலைக்கு வெச்சிருக்கேன்" விசாலம் சொல்ல, "ஹேய் தமிழ்செல்வி" என நட்பான புன்னகையுடன் கைகுலுக்க கையை நீட்டியவனின் கையை பிடித்து குலுக்கியவள் "ஹலோ" என்றாள்.

"சரி பாட்டி ப்ரெஷர் செக் பண்ணிரலாம்" என அவன் சொல்லவும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவியுடன் வந்த தமிழ்செல்வி அதை பாட்டியின் கையில் பொருத்தினாள்..

"குட்" என்றவன் அதை கொண்டு அவரை பரிசோதித்து விட்டு "ப்ரெஷர் இப்போ கண்ட்ரோல்ல இருக்கு பாட்டி. அதே மெடிசின்ஸ் கன்டினியூ பண்ணிக்கோங்க. உங்க மூட்டு வலி எப்படி இருக்கு?" என்றவன் கீழே அமர்ந்து அவரின் காலை அழுத்தி பார்க்க, "டெய்லி நீ கொடுத்த அந்த ஆயில் அப்ளை பண்ணி ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கறா செல்வி. அதனால இப்போ ரொம்பவே பெட்டரா இருக்கு" விசாலம் சொல்ல, "குட் செல்வி. நீங்க நர்ஸ்சா?" அசோக் கேட்க, "அவ இங்க தான் இன்னொரு வீட்ல கேர் டேக்கரா இருந்தா. இவ வந்ததுக்கு அப்பறம் மூணு நேரமும் கரெக்ட்டா ஜூஸ் குடிக்கிறேன், மெடிசின்ஸ் சாப்டறேன். டெய்லி காலைலயும் ஈவினிங்கும் ப்ரெஷர் செக் பண்ணிடறா" என விசாலம் சொல்லவும் "குட் குட். யூ ஆர் இம்ப்ரெஸ்ஸிவ். கீப் இட் அப்." என்றான் அசோக் பாராட்டும் விதமாக.

"சரி பாட்டி எனக்கு ஈவினிங் ஒரு சர்ஜெரி இருக்கு. நான் நாளைக்கு உங்களை வந்து பாக்கறேன்" என அசோக் கிளம்ப, "எப்படி இந்த மூணு நாளா வந்து பார்த்தியே அப்படியா?" என்றார் விசாலம்.

"ஐயோ பாட்டி மூணு சர்ஜெரி இருந்துச்சு அதான் கொஞ்சம் பிஸி ஆயிட்டேன். சாரி இனிமேல் கண்டிப்பா டெய்லி வரேன். அதுவும் நீங்க இவ்ளோ அழகான பொண்ணை உங்க கேர் டெக்கர் ஆக்கிருக்கிங்க. அப்போ வராம இருப்பனா?" அசோக் சொல்ல, அவன் சொன்னவிதத்தை கண்டு பாட்டி, தமிழ் இருவருக்குமே சிரிப்பு வந்தது.

"சரி பாட்டி கிளம்பறேன்" என அசோக் கிளம்ப, "ஸ்னாக் சாப்பிட்டு போங்க" என்றாள் தமிழ்செல்வி. அவளிடம் திரும்பி ஒரு புன்னகையை பதிலாக தந்தவன் கைக்கடிகாரத்தை காட்டி நேரமாகிவிட்டதை உணர்த்தி "நாளைக்கு" என்று புன்னகைத்து விட்டு கிளம்பினான்.

அவன் கார் வெளியே செல்வதை பார்த்து கொண்டிருந்த விசாலம் "ரொம்ப நல்லபையன். அம்மா இல்ல. அப்பாவும் டாக்டர். அதனால எப்பவும் என் பேரன்களோட விளையாடிட்டு இங்க தான் இருப்பான். அந்த சின்ன பையன் இப்போ டாக்டர் ஆயி என்னையே பார்த்துக்கரான்" என்றார் சிரிப்புடன்.

இரவு பாட்டிக்கு மருந்து கொடுத்துவிட்டு தமிழ்செல்வி கிளம்பும்போது அவளை பேருந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.