(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"இருக்கட்டும் ஜெமி…  நீங்க  இங்க வந்தால மம்மி கம்ஃபர்டபிளாயிடுவாங்க'

"ஷ்யூர்நான் பார்த்துக்கறேன்." அலைபேசி துண்டிக்கப்பட்டது.

ஜெமி கிரிஸ்டோபர்,  மேத்யூஸுடைய சகோதரி மகன். யூ.எஸ்ஸில் செட்டில் ஆகி விட்டவர்கள். ஜெமியுடைய அம்மாவும் அப்பாவும்  ஐந்து வருடங்களுக்கு முன்  இறந்து விட்டார்கள். அதனால் இப்பொழுது ஜெமி மட்டும்தான் அங்கிருந்தான்உண்மையை சொல்லப்போனால் ஜெமிக்கும் ரேச்சலுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஜெமி வீட்டினரின் விருப்பம். அதற்கு மேத்யூஸும்  ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இந்த முறை அவன் வரும்பொழுது அந்த விஷயம் நடக்கவும் செய்யலாம்.

'ரேச்சல் நீ ஜெமியிடம் கவனமாக நடந்து கொள். உன்  விளையாட்டுட்டுதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவனை நன்றாக கவனித்துக் கொள். உனக்கு தெரியும்... அவன் இந்த முறை கண்டிப்பாக உன்னை திருமணம் செய்யதான் வருகிறான். நல்லபடியாக உன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று அப்பாவும் நானும் கனவு கண்டுகொண்டிருந்தோம். இடையில் சில பிரச்சினைகள் வந்து விட்டன. இனிமேலாவது உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று சில அறிவுரை சொன்னார்.

அவள் எங்கே விளையாட்டுத்தனமாக இருக்கிறாள்?. அந்த விபத்திற்குப் பிறகு அவளுக்கு பல விஷயங்கள் மறந்து போய் விட்டன... பல என்று கூட சொல்லமுடியாது முற்றிலுமாக அவளுக்கு பழைய நினைவுகள் இல்லை. ஆனால் படிப்பது.. ஓடுவது.. ஆடுவது... உலக விஷயங்கள் அனைத்தும் அவளுக்கு இயல்பாக வருகின்றன. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவளுக்குத் தெரிகிறது.

ஆனால் ஜெமியை  யார் என்று தெரியவில்லை. அவன் திடீரென்று ஒரு நாள் ஸ்கைப்பில் வந்து பேசும் போது அவள் தடுமாறி விட்டாள். அவனிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை. அவனோ இயல்பாக பேசிக்கொண்டே இருந்தான்.

அவளுக்கு ஜெமியை பற்றிய நினைவே இல்லாததுபோல் விளையாடி அவனை ரகளை விடுவதாக  நினைத்துக் கொண்டு அவன் ஷீலாவிடம் புலம்பி விட்டான். அதனால்தான் இவ்வளவு அட்வைஸ் மழை பொழிகிறது.

"ஓகே சரிமா. நான் வேணும்னு எதையும் செய்யல... எனக்கு ஞாபக மறதி இருக்குன்னு உஙகளுக்கு தெரியும்ல. அதனால்தான் அப்படி நடந்துகிட்டேன். என்னையே எனக்கு மறந்து போய்விட்டது. சொன்னா கோச்சுக்குவீங்க.. எனக்கு உங்களை பத்தி நிறைய விஷயங்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.