(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தெரியல. ஆனால் மேனேஜ் பண்றேன்ல.."

"அது எனக்கு தெரியும். ஜெமிக்கு தெரியாது.."

"என்னை பற்றி அவங்கிட்ட சொல்லிடுங்க.."

"கண்டிப்பாகஅதை பிறகு பேசிக்கலாம்."

ஷீலாவின் மனதிற்குள் ஒரு சிக்கலான கேள்வி இருந்தது.  அவருக்கு இப்போது இருக்கும் நிலைமையில் ஜெமிக்கும் ரேச்சலுக்கும் திருமணம் செய்து வைப்பதில் விருப்பம் இல்லை. ஏனெனில் ரேச்சல் அந்த விபத்திற்கு பிறகு இப்போதுதான் மெல்ல தன்னுடைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறாள். விபத்தின் பாதிப்பு  எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதும் அவரால் கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜெமிக்கு அவளை திருமணம் முடித்து அவன் ஊருக்கு அனுப்புவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை.

ரேச்சலை பொருத்தவரை எப்போதுமே ஜெமியின் மீது  எந்த விருப்பமும் இருந்ததில்லை. அவனை ஒரு நண்பனாக தான் நடத்தி வந்தாள். அதேபோல்தான் ஜெமியும் அவளை மாமன் மகள் போல நடத்தவில்லை. ஒரு தோழி போலதான் நடத்தி இருக்கிறான். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் இப்பொழுது அவனுடைய மனநிலை மாறி இருந்து. அவளை திருமணம் முடிக்க விரும்பினால் என்ன செய்வது என்பதுதான் அவரது கேள்வி.

அப்படி ஒரு சூழல் வந்தால் அப்போது ரேச்சலை பற்றிய விவரங்களையும் அவனுக்குத் தெரிவித்து விடலாம் என்று நினைத்தார்.

விபத்திற்கு பிறகு ரேச்சல் முழுவதுமாக குணமாக நான்கு மாதங்களுக்கு மேல் பிடித்தது.  அவள் அதற்குப் பிறகும் தடுமாறிக் கொண்டே இருந்ததால்தான் சொந்த ஊரை விட்டு இங்கு குடியேறினார். இடையில் மேத்யூஸையும் இழந்து விட்டார். அவருக்கு ஆதரவாக இருந்த கணவரையும் இழந்ததால் இங்கு உள்ள சர்ச்சிற்கு விண்ணப்பித்து மருத்துவராக சேவை செய்ய வந்துவிட்டார். இங்கு வந்து பழைய நினைவுகளை கிளறாமல் அப்படியே வாழ்க்கையை கொண்டு செலுத்த ஆரம்பித்தார்.

இந்த ஊர் மக்களுக்கு அவர்களுடைய பழைய கதையில் ஆர்வம் இல்லை. எனவே கேள்விகள் கேட்டு தொல்லை செய்யாமல் அவருடன் பழக ஆரம்பித்து விட்டனர்.

இவர் இப்படி யோசித்துக் கொண்டிருக்க ரேச்சல் தன்னுடைய அறையில் தன்னைப்பற்றிய குழம்பிக் கொண்டிருந்தாள.

 அவளுக்கு இந்த ஜெமியை சிறுவயதிலிருந்தே பழக்கமாம். ஆனால் அவளுக்கு அவன் மீது எந்த ஈடுபாடும் ஈர்ப்பும் இல்லை. இந்த லட்சணத்தில் அவனை திருமணம் முடிக்க வேறு செய்யப் போகிறார்களாம்?. இதில் அவளுக்கு உடன்பாடும் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.