(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அவளுக்கு  ஏழை மக்களுக்கு சேவை செய்வதில்தான் விருப்பம் அதிகம்ஒரு ஆண் தன்னுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

காதல்…  கல்யாணம்... குழந்தை பெற்று கொள்வது... இதுபற்றியெல்லாம் அவள் ஒருபோதும் கனவுகண்டதில்லை.

அவளைப் பொறுத்தவரை அன்று இரவு உறங்குவதற்கு முன் யாருக்காவது சில நல்ல விஷயங்கள் செய்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள். உறங்க போகும்போது அவற்றை நினைத்து பார்த்து 'இந்த நாளை உபயோகமாக்கி தந்த தேவனுக்கு நன்றி' என்று சொல்லி விட்டு நிம்மதியாக உறங்கி விடுவாள்.

அவளுக்கு  என்று விருப்பங்கள் தனியாக எதுவும் இருந்ததில்லை. முக்கியமாக அம்மாவிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னை மாற்றிக்கொண்டாள். இப்படியிருக்கும் பொழுது அவள் யாரிடமும் பழக மாட்டாள். தேவைக்கு மட்டுமே பேசுவாள்.

இதுதான் வாழ்க்கை என்றும் தன்னை மாற்றிக் கொண்டிருந்த இந்த நிலையில் அவளுக்கு நேற்று இரவு வந்த கனவு அவளை குழப்பிக் கொண்டு இருந்தது. அவள் ஒற்றை ரோஜாவை யாராவது அவளிடம் வந்து தர மாட்டார்களா என்று ஏங்கியதில்லைஅப்படியே அவளுக்கு பூ தருவதாக இருந்தால் அதை ஜெமிதானே தந்திருக்க வேண்டும்?. பார்த்து ஒருநாள்கூட முழுசாக முடியாத அந்த ஆள் ஏன் தர வேண்டும்ஐயோ.. அவன் பூவைகூட தரவில்லைஒரு குழந்தையை அவள் கையில் வைத்தான். அது மனுகுட்டியாக இருக்குமோ…?. அடஅந்த மனைவி கேரக்டர் யார்?. இதுவரை கண்ணிலேயே படவில்லையே

அவளுடைய கேள்விக்கு பதிலை மதியம் லஞ்சின்போது அம்மா சொன்னார். அவன் மனைவி அவனை பிரிந்து சென்று விட்டாளாம்.

"டைவர்ஸாமா..?. அந்த குட்டி பாப்பாவை  விட்டுட்டு எப்படி போனாங்களாம்?."

"அது எனக்குத் தெரியாது ரேச்சல். ஆனால் நந்தினிதான் அந்த குழந்தையை  வளர்த்துட்டு இருக்கிறதா சொன்னாங்க. அந்த சத்யாவிற்கும்  ஒரு விபத்து நடந்து ஹாஸ்பிடல்ல இருந்து இப்பதான் தேறி வந்திருப்பான் போல... அதனால நந்தினியும் அவளுடைய கணவரும் இந்த குழந்தையை அவங்க பேபிபோல வளர்த்துட்டு வர்றாங்க."

[ஆவ்இந்த கதையில் ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் வருகின்றன. மொத்தம் எத்தனை விபத்து எத்தனை பேருக்கு நடந்திருக்கு என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் போலயே…   ஒன்லி ரோட் ஆக்ஸிடென்ட்தான்கணக்கில் எடுத்துக்கணும். முன்னால் நடந்தஅல்லது பின்னாளில் நடக்கப் போகிற டொமஸ்டிக் சம்பவங்களில்  கலந்திருக்கும் விபத்துக்களை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.