(Reading time: 15 - 29 minutes)
Nenchil thunivirunthaal

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி

காலங்கள் கடந்தன...காலத்தின் சுழற்சியில் பின்னோக்கி சென்றவர்கள் நிகழ்ந்த உண்மைகளைத் தெளிந்தெளிவாய் ஆராய, அன்று சுயநினைவின்றி நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு அனுதினமும் மனம் வருந்தி நின்றார் இராகவன். தன் மனைவிக்கும், வேற்றுக் கன்னிகைக்கும் வேறுபாடு பாராட்டவிடாமல் தன்னிலை மறக்க வைத்த தன் தீய வழக்கத்தினை எண்ணி மனதார நொடிந்து நொடிந்து மடிந்தே போனார் மனதளவில்! எப்போதும் கள்ளத்தனம் பாராட்டும் பார்வையில், கலைகளை மட்டும் கண்டவர் மனதில் ஆயிரமாயிரம் சஞ்சலங்கள்! மகனிடமும் சரியாக உரையாடாத அந்நிகழ்வு அவரை மனதளவில் பாதித்துச் சென்றது.தன்னிலை நொந்தவராய் சாளரத்தின் வழி வெறித்துக் கொண்டிருந்தவரை காண்கையில் மனதில் பல வேதனைகள் எட்டிப் பார்த்தன தர்மாவிற்கு! மனம்விட்டு பேசினால் குழப்பங்கள் களையப்படும் என்று விரும்பியவர் அதற்கானச் சூழலினை ஏற்படுத்த முயன்றவராய், எவருமற்ற அத்தனிமையில் நிம்மதியினைத் தொலைத்திருந்த தன் கணவனைப் பின்னாலிருந்து அணைக்க, ஏதோ நெருப்பு தன் மேல் விழுந்ததனைப் போன்று அவரை விலகினார் இராகவன். நிகழ்ந்த அச்சம்பவம் தர்மாவின் மனதினை நுட்பமாய் குழப்பிவிட்டுச் செல்ல, காரணம் புரியாமல் திகைத்து நின்றார் அவர்.

"எ...என்னாச்சு உங்களுக்கு?" என்றவரின் கண்கள் கலங்கியிருந்தது. தன் ஆருயிராய் கலந்தவளிடம் காட்டிய அவ்விலகல் அவரையே திகைக்க வைக்க, செயலிழந்துப் போனார் இராகவன்.

"என்னங்க ஆச்சு? என்னமோ தப்பாப்படுது எனக்கு! ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?" அவர் கலங்கியத் தருணம் மரணத்தின் வலியினை உணர்ந்தார் இராகவன். பேச்சின்றி, நினைவின்றி தன் மனையாளை வேதனையோடு தரிசித்துக் கொண்டிருந்தார் அவர். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவராய், மெல்ல இராகவனது கன்னத்தினைத் தீண்டியவர்,

"என் மேலே எதாவது கோபமா இருக்கீங்களா? ஆதிக்கிட்ட கூட நீங்க சரியா பேசலை. ஏன்?" மனதிலான வேதனைகளைத் தெள்ளத் தெளிவாய் அவர் கேட்டுவிட, உடைந்துப் போய் கதறி அழுதார் இராகவன்.

"ஏங்க..என்னாச்சுங்க?" பதறியவண்ணம் கைமீறிய சூழ்நிலைகளைக் கண்டுத் துணுக்குற்றார் அவர்.தன்னிலையில் அப்படியே அவர் பாதத்தின் அடியில் அவர் மண்டியிட, பதறிப்போய் விலகி நின்றார் தர்மா. என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்திருக்கும்? என்று ஏதும் விளங்கவில்லை அவருக்கு! சிலையாகிப் போய் நிற்க., தாங்க இயலா அப்பாரத்தினை இறக்க துணிந்தார் இராகவன்.

"என்னை மன்னித்துவிடு தர்மா!" இரு கரம் கூப்பி தன் பக்கமான மன்னிப்பினை வேண்டி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.