(Reading time: 15 - 29 minutes)
Nenchil thunivirunthaal

காண்பதுப் போல கண்டவரைக் கண்டு அனைவருமே திகைத்துப் போயினர்.

"மா! என்னம்மா பண்றீங்க? அது ஒரு அநாதை...!" என்ற குரல் வந்ததும் அவர் கண்கள் அக்னி ஜூவாலைகளைக் கக்கின.

"யாரது? யார் சொன்னா? என் முன்னாடி வந்துச் சொல்லு!" அவள் குரல் கேட்டு அனைவரது முகத்திலும் திகில் பரவியிருந்தது இராகவனை உட்பட! அச்சின்னஞ்சிறு குழந்தையின் மேலிருந்த செங்குருதியினைக் கூட தூய்மைப்படுத்தாமல் தாரை வார்த்து சென்றிருந்தாள் கௌரி.

"கௌரி மேலே தப்பு இருக்குன்னா, இந்தக் குழந்தையோட அப்பா மேலேயும் தப்பிருக்கு தானே! தன்னோட வாரிசுன்னு தெரிந்தும், ஊரே இந்தக் குழந்தையை சபித்தும், அவங்களுக்கு இது என் குழந்தைத்தான் சொல்ல தைரியம் வரலையா?" மறுமுகமாய் குத்திய வார்த்தைகள் அவரை தலைக்குனிய வைக்க, அகிலாண்டேஷ்வரியின் பார்வை திகிலோடு தன் மகனை நோக்கியது. அப்பாலகனோ தாயின் அரவணைப்பில் மெல்ல தன்னைத் தானே ஆசுவாசப்படுத்தி உறங்கத் தொடங்கினான்.

"இவனுக்கு பசிக்கும் பால் கொடுக்கணும்!" என்று முன்னேறியவரை தடுத்தனர் யாவரும்!

"மா! என்னம்மா நீங்க? இந்தக் குழந்தையோட நீங்க வர அனுமதிக்க மாட்டோம்!" என்று அவருக்கே அனைவரும் தடைவிதிக்க, கலவரமானது அவ்விடமே!

"எனக்கு அனுமதியில்லையா?இல்லை இவனுக்கு அனுமதியில்லையா?" என்ற வினாவினை முன் வைத்தார் அவர்.

"நீங்க எங்க தெய்வம்மா! ஆனா அந்தக் குழந்தை ஊருக்குள்ளே வரக்கூடாது!" என்று சாதித்தனர் யாவரும்!தர்மாவின் பார்வைத் தீர்க்கமாக இராகவனை நோக்க, அவரோ சிரம் தாழ்ந்து நின்றார். அவரது நிலை உணர்வுகள் அற்ற நிலையினை அடைந்திருந்தது.

"அப்போ சரி! இவன் இங்கே வரக்கூடாததுத் தான். நானும் வரப் போறதில்லை!" என்று அவர் கூற, அனைவரும் அதிர்ந்துப் போயினர்.

"தர்மா என்ன நீ? எதுக்காக இப்படி அடம் பிடிக்கிற?" இராகவன் வாய் திறவ, கொதித்தே விட்டார் அவர்.

"யாரும் பேச வேணாம்! இவன் ஒண்ணும் அநாதையில்லை. இவன் என் குழந்தை! என் வாரிசு! என்ன சொன்னீங்க? இவன் அவமானமா? இவன் அசிங்கமா? ஒருநாள்...இந்த உலகம் இவன் பெயரை சொல்லும்! இவனை பெயரை உச்சரிக்காத நாக்கு இருக்காது. இன்னிக்கு யாரெல்லாம் இவனை தீண்டத்தகாதவனாக பார்க்கிறீங்களோ, ஒருநாள் இவனைப் பெருமையோட பார்ப்பீங்க! கடவுள்னு கூட பார்க்காம இவன் இங்கே இருந்தான்னு இந்த ஊர் காவல் தெய்வத்தையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.