(Reading time: 15 - 29 minutes)
Nenchil thunivirunthaal

வெறுப்புற்றுப் போயிருந்தார் அவர். அவரது மொழிகள் தர்மாவின் மனதில் பெருமளவு சந்தேகத்தினை ஏற்படுத்தியது. அன்று விளங்கிய உண்மைகளுக்குப் பின் அவள் இராகவனிடமோ, கௌரியிடமோ ஒருவார்த்தையும் உதிர்க்கவே இல்லை. ஆயினும், இம்மொழிகள் அவர் மனதினை ஏதோ அதிர்வலைகளை விளைவிக்கவே செய்தது.

"சாந்தி! எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது! கௌரியை தைலம் எடுத்துக்கிட்டு வரச்செல்லு!" ஆணைப் பிறப்பித்தவராய் தனதறைக்குச் சென்றார் தர்மா.எண்ணற்ற வினாக்கள் மனதில் ஒரே நேரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்க, ஏதும் புலப்படாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார் தர்மா.

அறைக்கதவானது மெல்லத் திறவப்பட, அவரதுப் பார்வையானது மேலும் இறுகியது.சிரம் தாழ்ந்தவண்ணம், எண்ணற்ற குற்றவுணர்வுகளைத் தன் மனதில் தாங்கியவராய் உள்ளே நுழைந்தார் கௌரி. ஏனோ அவரது முகத்தினைக் காண விரும்பாமல் தன் பார்வையினை விலக்கிக் கொண்டார் தர்மா.

"கால் வலிக்குதுன்னு சொன்னீங்களேம்மா!" தயங்கியப்படி ஒலித்தது அவர் குரல். அவரிடத்திலோ எவ்வித விடையுமே இல்லை. தர்மாவின் காலடியில் அமர்ந்தவர், அவர் பாதத்தினைத் தீண்ட முனைய சட்டென தன் பாதத்தினை எடுத்துக் கொண்டார் தர்மா. திடுக்கிட்டு போனவராய் அவரது முகத்தினை நோக்கினார் கௌரி.

"கர்ப்பமா இருக்கியா?" சட்டென அவர் உதிர்த்த வினாவில் ஆடிப்போனார் அவர். பதிலுரைக்க வார்த்தைகள் அற்றுப்போய் அச்சத்துடன் தர்மாவின் முகத்தினை நோக்கினார் அவர்.

"சொல்லுடி! ஏன் பேசாமல் இருக்க?" அவர் மிரட்டிய விதத்தில் அவர் தேகமெல்லாம் நடுங்கிப்போனது.

"எ...ன்னை மன்னித்துவிடுங்கம்மா!" என்று அவரது பாதம் பற்றி மண்றாடினார் கௌரி.அதிலே உண்மைநிலையினை ஊகித்துக் கொண்டவரின் மனதில் எண்ணிலடங்கா வலிகள்!

"என் கண் பார்வையிலே நிற்காதே! எழுந்துப் போ! என் முன்னாடி நின்றால் நானே உன்னைக் கொன்னுடுவேன்!" கண்ணீரோடு உடைந்துப் போய் அழுதார் தர்மா. மனமெல்லாம் வலிகள் மட்டுமே நிலைத்திருந்தது. எப்பெண்ணிற்கும் இத்தகு வேதனை ஆகாது என்று மனதார வேண்டினார் அவர். கண்ணீரோடு அறையினைத் துறந்து வெளியேறிய கௌரியின் எதிரில் கேள்விக்களுக்கு எதிர்ப்பட்டார் இராகவன். கௌரியின் கண்ணீருக்கான விடை அவர் எதிர்நோக்காததே! மனவேதனையோடு விலகி ஓடினாள் அவர்.  கேள்விகளோடு தனது அறைக்குள் நுழைந்தவரினை இறுகிய முகத்துடன் வரவேற்றார் தர்மா. அவரது கூர்மையானப் பார்வை இராகவனையே துளைத்துக் கொண்டிருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.