செவிகளில் வைத்தார் அவர்.
"சொல்லுங்க..." மறுமுனை கூறிய ஏதோ ஒன்று அவரைத் திடுக்கிட வைத்தது.
"வரேன்...உடனே வரேன்!" இனம்புரியா பதற்றம் அவர் குரலில் தொனிக்க, கேள்வியோடு தந்தையினை நோக்கினான் அசோக்.
"ஆங்..! நான் கொஞ்சம் நீலகிரிக்கு போறேன்பா! கொஞ்சம் முக்கியமான விஷயம்! வந்ததும் சொல்றேன்!" உண்மை நிலையினை அவர் கூற விழையவில்லை.
"எதாவதுப் பிரச்சனையா?" பதறிய புதல்வனை ஆசுவாசப்படுத்தினார் தந்தை.
"இர்லை..இல்லை அசோக்! ஒரு இரண்டு நாளில் வந்துவிடுவேன். நீ..அதுவரைக்கும், என்ஜாய் பண்ணிட்டு இரு! எதுவாக இருந்தாலும் நான் வந்ததும் பார்த்துக்கலாம்!" நான் வரும் வரையில் பார்வதியிடம் எவ்வித உரையாடலும் நிகழ்த்த வேண்டாம் என்பதே அந்த மறைமுக வேண்டுதல்! அதற்கு உடன்பட்டவனாய் தலையசைத்தான் அசோக்.
நள்ளிரவினைக் கடந்துவிட்ட வேளை அது! நடுக்கூடத்தினில் அமர்ந்துக் கொண்டு தன் முன்னிலையில் மதுபானங்களைப் பரப்பியவனாய் போதையில் மூழ்கியிருந்தான் அதர்வ். அவனது ஓர் கரத்தில் ஏதோ சில காகிதங்கள் பொதி்ந்திருந்தன. அதனைப் பார்த்தவனாய் மீண்டும் மதுவினைத் தன் தொண்டையில் சரித்துக் கொண்டான் அவன். இல்லத்தின் வெளியே ஏதோ ஓர் கார் வந்து நிற்கும் ஓசையினை கவனித்தும், கவனியாமல் மீண்டும் அத்தீய பணியினையே புரிந்தான் அவன். வாயிலின் கதவு மிக வலிமையான கரத்தினால் தட்டப்பட, திகிலோடு நடப்பவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் கதவினைத் திறந்தார் ஓர் பணியாள். பதற்றமாய் உள்ளே பிரவேசித்தவர் சூர்ய நாராயணனே! தனது மகனின் நிலைக் கண்டுத் திகைத்தவராய் உறைந்துப் போய் நின்றார் அவர்.
"அதர்வ்!" ஒரே கூச்சலில் சுயநினைவு அடைந்தவன், பரிப்பூரணமாய் குணமானத் தன் தந்தையினை ஏற இறங்க நோக்கினான்.
"நீ குணமாகிட்டியா? இதை ஏன் அந்த லாயர் என்னிடம் சொல்லலை?" என்றவன் மீண்டும் மதுவினைத் தன் தொண்டையில் சரிக்க முயல, வேகமாக சென்று அதனைத் தடுத்தவர், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நிலைத்தடுமாறி கீழே விழுந்தவன் சினத்திற்கு பதில் சிரிப்பினை வெளிக்காட்ட குழம்பிப் போனது அவர் மனம்!
"மது எங்கே? மது....!" அவர் கூக்குரலிட,
"அவங்க இங்கே இல்லை!" என்றான் சிரித்தப்படி!
"எங்கே அவ?" அதட்டலாய் வினவினார் அவர். நீண்ட மௌனம் சாதித்தவன்,
"யாருக்குத் தெரியும்? ஒருவேளை என் அப்பாவைத் தேடி போயிருக்கலாம்!" என்றுக் கூற