தர்மாவிற்கே கண்ணீரினை வரவழைத்து, அவனைத் தன் புதல்வனாய் பாவித்து வாரி அணைத்து முத்தமிட வைத்திருக்கும்! ஆயிரம் காரணம் கூறினாலும், ஒரு தாய் என்றும் தாய் தான்! தாய்மை என்றும் தாய்மை தான்!
மறுநாள் காலை....
கண் விழித்து கண்டப்போது தன் அருகே தன் புதல்வன் இல்லாததனைக் கண்டு திடுக்கிட்டார் சூர்ய நாராயணன்.
"அதர்வ்? அதர்வ்?" பதற்றமாக அவர்விரைய அவனது பிம்பம் அவ்வில்லத்தின் தோட்டப்புறத்தில் தென்பட்டது. வெறுத்துப் போன முகத்துடன், தனக்காக இல்லத்தில் வைத்திருந்த அனைத்து மதுபானங்களையும், அவனது அனைத்துத் தீய பழக்க வழக்கங்களையும் ஒவ்வொன்றாய் உடைத்தும், அக்னியில் வைத்து எரித்துக் கொண்டிருந்தான் அதர்வ். அதனைக கண்டவருக்கு என்னத்தான் நிகழ்கிறது என்று ஏதுமே விளங்கவில்லை. குழம்பியவண்ணம் அவன் தோளினைப் பற்றி உலுக்கியவரை நிமிர்ந்துப் பார்த்தவன் ஏதும் பேசாமல் மௌனியாக மீண்டும் ஒவ்வொன்றாய் உடைக்கத் தொடங்கினான்.
"என்னைவிட்டு எல்லாரும் போங்க! நான் தனியா இருக்கணும்!" மீண்டும் உடைந்தது ஓர் குடுவை! அவரோ ஏதும் பேசாமல் தன் பங்கிற்கு எடுத்து உடைக்கத் தொடங்க, அவன் செய்கைத் தடைப்பட்டது.
"தனியா எல்லாம் இருக்க முடியும்னு நினைக்காதே! உனக்கு என்னைப் பற்றி தெரியாது! உனக்குன்னு ஒரு அழகானக் குடும்பம் இருக்கு!" என்றார் அவர். அவனிடமிருந்து பலமான சிரிப்பு வெளியானது.
"ஆமா! பெத்த அப்பனே யாருன்னு தெரியாத அளவுக்கு ஒரு குடும்பம்!" என்று கூற, இரு நொடிகள் அவன் முகத்தினை உற்று நோக்கிவிட்டு ஒரு அறைவிட்டார் சூர்ய நாராயணன். அவன் ஏதோ பேச வாயெடுக்க மீண்டும் விழுந்தது மற்றொரு அறை! அலறிப்போய் அவரை நோக்கியவனிடம்,
"என்னடா படுத்த படுக்கையா இருந்தவன் தானே பொத்திக்கிட்டு இருப்பான்னு பார்த்தியா? உன் வயசை கடந்துத்தான் வந்திருக்கேன்! இப்படி பேசுனா அப்படியெல்லாம் இல்லைடா கண்ணான்னு ஆறுதல் படுத்துவேன்னு நினைத்தியா? இதோ பார்...கடைசி வார்னிங்! இதுக்கு மேலே இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வந்ததுன்னா தலையைத் திருப்பிவிடுவேன் ஜாக்கிரதை!" தன் ஆள்சுட்டிவிரல் நீட்டி எச்சரிக்கை செய்தார் அவர்.
"நீ என் புள்ள, அவ்வளவுத்தான்! சீக்கிரம் இதை எல்லாத்தையும் உடைத்துவிட்டு எழுந்து வா! கோபத்தை கிளப்பிட்டு இருக்காதே!" என்று எழ முற்பட்டவரைத் தடுத்தவன், என்ன
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Ana drama parka ipa nu konjam varuthm
Hoom
Lovely saki
Thank you.