(Reading time: 12 - 23 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

விளக்கினான் அவன்.

"அம்மாவுக்கு இதயத்துல அடைப்பு இருந்ததுப்பா! நான் எவ்வளவோ சர்ஜரி பண்ணிக்க சொல்லி கெஞ்சினேன். சர்ஜரி பண்ணாலும் சர்ஜரி பெயில் ஆக ரிஸ்க் ரேட் அதிகமாக இருந்தது. அது பெயிலாகி சீக்கிரமே இறப்பதற்கு, ஒரு வருடமோ, இரண்டு வருடமோ உயிரோட இருக்கலாம்னு சொல்லி அதைத் தட்டிக் கழித்துவிட்டாங்க! அவங்க இறக்கும் முன்னாடித் தான் சொன்னாங்க, அந்த இரண்டு வருடம் அவங்க காத்திருந்தது உங்களைக் கடைசியா பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்காதான்னுத் தான்!" என்றதும் அவரது இதயத்துடிப்பே நின்றுப்போனது.

"அதனாலும் கூட நான் உங்க மேலே கோபத்தில் இருந்தேன். அப்போ அம்மாக்கிட்ட எவ்வளவோ கெஞ்சினேன். நீங்க யாருன்னு இல்லைன்னா அவங்கத்தான் யாருன்னு ஒரே ஒரு விஷயத்தையாவது சொல்ல சொன்னேன். நீங்க சொன்னா கேட்பாங்கன்னு ஒர நம்பிக்கை எனக்கு! ஆனா, ஏதோ காரணத்துக்காக அவங்க என்னிடம் எதுவும் கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை!" என்றான் அவன். தர்மா உண்மைகளை மறைத்ததன் காரணம் அவருக்குத் தெள்ளத் தெளிவாய் விளங்கிற்று. அச்சமயம் நிச்சயம் அவள் மனதில் தன் புதல்வனை அவமதிப்பர், தந்தையாகிடினும் சூர்ய நாராயணனும் அவனை ஏற்க மாட்டார் என்ற எண்ணமே நிரம்பியிருந்தது. மனதளவில் நொறுங்கிப் போன தன் தந்தையினை கவலையோடு நோக்கினான் அசோக். அனைத்தும் சுபமாகி இருக்கும் ஒரு வார்த்தை அவள் உரைத்திருந்தால்! அவரால் எவ்வித வார்த்தையையும் உரைத்திட இயலவில்லை. மனம் வெதும்பி நின்றார்.

"அதெல்லாம் மறந்துவிடுவோம்பா! இனி எதற்கும் கவலைப்பட்டு பலனில்லை. நான் இங்கே வந்தது பாட்டியை பார்க்கத்தான்!"தனது நோக்கத்தினைத் தெளிவாக உரைத்தவனைக் கண்டு திகைத்துப் போனார் சூர்ய நாராயணன்.

"அசோக்?" அவன் நாமமே வினாவாக உருமாறியது.

"ஆமாம்பா! ஒருவேளை அவங்க கோபம் குறைந்திருக்கலாம்ல?" என்றவனிடத்தில் என்னப் பதில் நல்குவது என்று விளங்கவில்லை அவருக்கு! ஒரு காலத்தில் தன் மகளோடு சேர்த்து அவன் உயிரையும் கருவிலே பறிக்கத் துணிந்தவரின் மன்னிப்பினை வேண்ட முயல்கிறான் இவன். அவன் நடவடிக்கைகள் குறித்த ஐயமில்லை, ஆயினும், அவன் குணங்கள் அவன் தாயினையே பிரதிப்பலித்துக் கொண்டிருந்தன.  அவள் இருந்தாலும் இப்படியே உரையாடியிருப்பாள்! ஆனால் அவன் வேண்டிய மன்னிப்பினை வழங்க பார்வதி தயாராகவே இல்லை என்பது அவர் அறிந்தது. சிலையாகிப் போனவரின் கைப்பேசி அலற, அதனை எடுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.