(Reading time: 12 - 23 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

நழுவி நிலம் விழுந்தது.

"அம்மாத்தான் உன்னை அந்த நிலைமைக்கு கொண்டு வந்தாங்களா?" நம்ப இயலாதவனாய் அவன் கேட்க,சுக்கலாய் நொறுங்கிய இதயத்தோடு ஆம் என்று தலையசைத்தார் அவர். இத்தனை ஆண்டுக்காலமாய் நம்பிய நம்பிக்கைகள் யாவும் உடைந்து சருகாக, அப்படியே கீழே அமர்ந்து ஓர் பைத்தியக்காரனாக கதறி அழுதான் அதர்வ். அவன் தன் உதிரத்தில் இருந்து தோன்றவில்லை ஆயினும், இத்தனை ஆண்டுக்காலமாய் தன் புதல்வனாய் பாவித்த தந்தையின் மனம் வெதும்பி நின்றது. கண்ணீரோடு அவனருகே சென்று மண்டியிட்டவர் அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"நீ என் மகன்டா! நான் உன்னை எப்போதும் வேற ஒருத்தனா பார்த்ததில்லை." எவ்வளவு சமாதானம் செய்தும் அவன் சமாதானம் கொள்வதாகவே இல்லை சற்றும்!

"அதர்..வ்..!" தந்தையின் அணைப்பு அவனைக் கட்டுப்படுத்த நெடுந்நேரம் எடுத்துக் கொண்டது.

"இங்கே பாரு..! எதுவுமில்லை...அப்பா இருக்கேன்! நீ...நீ என் பையன்தான்! எழுந்திரி வா! கொஞ்சநேரம் தூங்கு!" ஆறுதலாக அவனை எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றார் அவர். பித்துப் பிடித்தவனைப் போல் கிடந்தவனை மெல்ல உறங்க வைத்தவராய் தானும் உறங்கிப் போனார் சூர்ய நாராயணன்.

உறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் கண் விழித்தவன், சுற்றும் முற்றும் நோக்கினான். அது சூர்ய நாராயணனின் அறை! அருகே தந்தையானவர் உறங்கிக் கொண்டிருக்க, நெடுந்நேரம் அவரை உற்று நோக்கிவிட்டு எழுந்து அருகிலிருந்த அலமாரி நோக்கி நடந்தான் அவன். அங்குத் தேடப்பட்ட ஏதோ ஓர் பொருள் காணவில்லை! ஆம்..! தர்மாவின் புகைப்படம் காணவில்லை. மீண்டும் பித்துப் பிடித்தவனைப் போல தன் தந்தையினைத் திரும்பி நோக்மினான் அவன்.

"அந்தத் தர்மா தான் உன்னுடைய அப்பாவுடைய இந்த நிலைமைக்குக காரணம்! ஆனாலும் அந்த மனுஷன் அவளைத் தான் நினைத்துட்டு இருக்காரு!" என்ற குரல் செவிகளில் ஒலித்தது.

"என் தர்மாவோட பவித்ரத்தையே களங்கப்படுத்தி, என் கூட இருந்ததுக்கு இதை எடுத்துக்கோன்னு அவ மேலே பணத்தை விட்டெறிந்து, எங்களை நிரந்தரமாய் பிரித்து, எனக்கு ஏதோ ஒரு மருந்தை கொடுத்து என்னை செயலிழக்க வைத்து, உன் மனசுல விஷத்தை விதைத்தது எல்லாமே மது தான்!" தந்தையின் குரலும் செவியில் விழுந்தது. மீண்டும் திரும்பி அந்த வெற்று இடத்தினை நோக்கியவன் என்ன நினைத்தானோ, சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து மன்னிப்பினை வேண்டி அழ தொடங்கினான். வெளியே விசும்பல் சப்தமும் வாரா அளவிற்கு நேர்த்தியாக அழுதான் அவன். நிச்சயம் அவன் மன்னிப்பினை வேண்டிய விதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.