(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 07 - ஜெபமலர்

சென்னை....

ராகவ் முகத்தில் வலியின் வேதனை தெரிய அவனைப் பார்த்தவள், ராகவ் யார் அது... ஏன் நம்மை தாக்க வந்தாங்க...

தெரியலை குயிலி... அதான் யோசனையாக இருக்கிறது.யாராக இருக்கும் என்று..

ஓ.... அதை விடுங்க ராகவ்..நேராக உங்களை வீட்டில் விட்டு விடவா...

சற்று யோசித்தவன் , வேண்டாம் குயிலி...வீட்டில் யாரும் இல்லை. ராமுக்கும் கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை. அதனால் வீட்டுக்கு வேண்டாம். உன்னை விட்டுவிட்டு நான் ஆஃபிஸ் போய் விடுகிறேன்.

ம்ம்...

என்ன யோசிக்கிற குயிலி.

பேசாமல் என் கூட இன்றைக்கு ஸ்டே செய்து விட்டு நாளைக்கு கிளம்புறிங்களா...

உன் கூடவா...

ஆமா... ஏன் என் கூட தங்க இவ்வளவு யோசனை.

உங்கள் ஆசிரமத்தில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா...

ஆசிரமத்திலா என்று யோசித்தவள், நான் படிப்பு முடிந்ததும் வெளியே வந்து விட்டேன். இப்போ தனியா ஒரு அறை எடுத்து தங்கி இருக்கிறேன்.

ஓ... என்றவன் சரி குயிலி போகலாம் என்று சொல்ல, உங்க வீடு போல வசதியாக இருக்காது என்றாள்.

நீ இருக்கும் இடத்தில் இருக்க எனக்கு எந்த வருத்தமும் இருக்காது.

அப்படி என்றால் ஓகே தான் என்றவள் காரின் வேகத்தை கூட்ட அவனோ ஏதாவது முதலில் மருத்துவமனைக்கு போகலாம் என்றான்.

மருந்துவமனையா என்றவள் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு நேராக வீட்டை அடைந்தாள்.

குயிலி... என்றவன் கேள்வியாக அவளை நோக்க அவளோ உள்ளே போகலாம் என்றாள்.

அவனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவளை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்தான்.

ஐந்து நிமிடத்தில் ஆவி பறக்க டீயை நீட்டினாள். டீயின் மணமே குடிக்க தூண்டியது. 

டீயை வாங்கி ஒரு சிப் உள்ளே இழுத்தவன் விழுங்க முடியாமல் அவளை பார்க்க அவளோ வலி கேட்கும் குடிங்க என்று சொல்ல வழியில்லாமல் குடித்து முடித்தான்.

அவனிடம் இருந்து காலி கோப்பையை வாங்கினவள் உள்ளே சென்றாள். சிறிய கிண்ணத்தோடு சற்று நேரத்தில் வெளியே வந்தவள் காலை மடக்கி கீழே உட்கார்ந்து கொண்டு அவனையும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.