(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவன் அறிவு யோசிப்பதை நிறுத்தி விட்டு அங்கே நடப்பதை கவனிக்க ஆ... வென்று அலறி விட்டான்.

ஜீன்ஸ்ல் இருந்து டவலுக்கு மாறி நின்று கொண்டு இருந்தான்.

ராகவ் ... இப்போ உங்களால் உட்கார முடியும்.. அமருங்கள் என்று சொல்ல அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு கீழே அமர்ந்தான்.

கிண்ணத்தில் மிதமான சூட்டில் இருந்த எண்ணெயை எடுத்து அவன் தோள்பட்டையில் ஊற்றி நீவி விட ஆரம்பித்தாள்.

ஒரு பக்கம் வலி‌.. இன்னொரு பக்கம் இனம்புரியாத ஒரு உணர்வு... எவ்வளவு நேரம் வலி தாங்கி கொள்ள முடியும்..

ஆரம்பத்தில் கண்ணில் ஆனந்தத்தில் கட்டிய நீர் இப்போது வெளியே வந்தது. அந்த அளவு வலி தாங்க முடிய வில்லயா என்று யோசிக்க இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. அப்படி என்றால் ஏன் என்று யோசித்துக் கொண்டே இருக்க...

ராகவ்... இரத்தக்கட்டு தான், இன்னும் இரண்டு முறை இவ்வாறு நீவி விட்டால் சரியாகிவிடும். சுடு தண்ணீர் விலாவி வைத்து இருக்கிறேன். குளித்துவிட்டு வாருங்கள். நான் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வெளியேறினாள்.

அவன் மனமோ இடியாப்ப சிக்கல் போல சிக்கி தவித்தது. மனம் அவளின் அன்பிற்கு ஏங்கி தவிக்க அறிவு அவளை குற்றவாளியாக்கி கொண்டு இருந்தது.

அவனும் தண்ணீரை எடுத்து ஊற்றினான். இதே போல சிறு வயதில் அம்மா செய்து இருக்கிறார்களே.. எப்போது என்று யோசிக்க தாயின் முகத்திற்கு பதில் வேறு ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. திடுக்கிட்டவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தோடு நிற்க குயிலி யின் சத்தம் கேட்டது.

குயிலி... ஏதாவது சொன்னியா என்று கேட்க ஆமா ... உங்களுக்கு நைட் போட டிரெஸ் என்று நீட்ட அவனும் வாங்கி கொண்டான்.

குளித்துவிட்டு வெளியே வந்தவனுக்கு சூடாக தோசையும் சட்னியும் இருந்தது. ஆனால் அவனுக்கு யோசனையாக இருந்தது.

ஆனால் பெண்ணவளோ வலியில் தவிக்கிறான் போல என்று நினைத்து தோசையை பிய்த்து அவன் வாயருகே நீட்டினாள்.

அவனுக்கு மறுக்க தோன்றவில்லை... அவனும் வாங்கி கொண்டான். அம்மா ஒரு நாளும் இப்படி செய்தது இல்லையே... உடம்பு முடியவில்லை என்றால் கூட தானே சாப்பிட்டதும் நினைவு வந்தது. யாரும் இல்லை என்றால் தனக்காக கண் விழித்து பார்த்து கொள்ளும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.