(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ராமுவின் நினைவும் வந்தது.

அவனுக்குள் பல குழப்பங்கள் ஒரே நேரத்தில் தோன்ற மிகவும் சோர்ந்து போனான். தோசை ஊட்டி விட்டதோடு ஏதோ ஒரு கசப்பு ஜீஸையும் கொடுக்க வாங்கி குடித்து விட்டு அருகில் கிடந்த மரக்கட்டிலில் படுத்து கொண்டான்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து பஞ்சு மெத்தையில் படுத்த முதுகு கட்டாந்தரை போன்ற மரத்தில் படுத்ததும் வலியை உணர்த்தியது.

ஆனால் மனமோ இதுவரை அனுபவிக்காத அமைதியை உணர்ந்தது.

ஒரு பெட்சீட் எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டாள் குழலி ... இல்லை இல்லை குயிலி ( ராகவ்.... அவளை குயிலி என்று அழைப்பதால் நாமும் குயிலி என்றே அழைப்போம்... ஓகே வா)

அவள் கையை பிடித்து தன்னருகே அமர்த்தியவன் குயிலி... ஒரு பாட்டு பாடேன் என்றான்.

என்ன பாட்டு பாடுவது என்று யோசித்தவள் கண்களை மூடி பாட ஆரம்பித்தாள்..

கண்ணே என் கண்ணின் மணியே...

கண்ணுக்குள் வைத்து உன்னை காத்திடுவேன்...

கழுகாய் சுற்றி வரும் கயவர்களை

கண்கொத்தி பாம்பாய் விரட்டிடுவேன்...

ஜென்ம ஜென்மமாய் என் துணையாய் நீயே வேண்டும்....

ஏழேழு ஜென்மமும் உன்னை என் மனதில் நான் சுமக்க வேண்டும்...

உயிர் உன்னோடு கலந்திட்டதே...

உசுருக்குள் நீயே நிறைந்திட்டாயே...

உன் மூச்சில் நான் சுவாசமாவேன்...

உன் சுவாசத்திற்கு நான் மூச்சாவேன்...

உன்னை காக்க என் உயிர் துறப்பேன்...

உன் மூச்சாக உலகை வென்று வருவேன்..

உன்னை தவிர உறவொன்றுமில்லை...

உன்னை நீங்கினால் உயிருமில்லை உடலில்...

கண்ணே என் கண்ணின் மணியே...

கண்ணுக்குள் வைத்து உன்னை காத்திடுவேன்...

கழுகாய் சுற்றி வரும் கயவர்களை

கண்கொத்தி பாம்பாய் விரட்டிடுவேன்...

பாடி முடித்து கண் திறந்தாள். அவளது வலக்கையை பிடித்து தன் இதயத்தில் மேல் வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.