(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

முட்டாள்.... நீ யாரென்று தெரியாத வரை தான் உனக்கு பாதுகாப்பு. இன்னொரு தடவை இந்த தப்பை செய்யாதே... பாஸ் பாஸ் னு வாலாட்டுகிறவனாயிருந்தாலும் சார் சார் னு கைகட்டி நிக்கிறவனாயிருந்தாலும் உன் குரலை மட்டும் தான் கேட்கனும்... உன்னை பார்க்க கூடாது. புரிந்ததா...

ஆ...ஆமாண்ணா..

காரியம் முடிந்ததும் சாரங்கனை கழட்டி விட நான் வழி சொல்றேன்.. அது வரை உன் காலை சுற்றி வருகிற நாய் குட்டியா பார்த்து கொள்...

ம்ம்... சரிண்ணா...

சரி அதை விடு... இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். கவனமா கேளு... அந்த பொண்ணு கதையை முடிக்க வேண்டாம். ஆனால் கவனமாக வாட்ச் பண்ண சொல்லு. ஒருவேளை நமக்கு தேவை படலாம்.

சரி அண்ணா...

சத்யா ... பெர்முடா முக்கோணத்திற்கு நடுவில் ஒரு தீவு இருக்கிறது உறுதி ஆகி விட்டது. அதை ஆராய்ச்சி செய்ய ஒரு குழு தயாராகி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக நாம் அங்கு செல்ல வேண்டும்...

ஆனா அண்ணா... அந்த இடத்திற்கு பக்கத்தில் யாரும் போக முடியாது என்று சொன்னீர்களே...

ஆமா... ஆனால் அதற்கான வழியை கண்டு பிடித்து விட்டார்.

யார் அண்ணா... 

நம்ம கட்டுப்பாட்டில் இருக்கும் வான்வெளி ஆராய்ச்சியாளர் பிரசாத்...

ஓ மை காட்.... அவர் இறந்து போய் விட்டதாக பேசப்பட்டது.

எஸ்... அது திட்டமிட்டு நடைமுறைபடுத்தப்பட்ட பொய்யான தகவல்.. இப்போ எல்லாவற்றையும் பேசுவது நல்லது அல்ல... நாளைக்கு 3818க்கு வந்து விடு ...

ஓகே அண்ணா... 

எதற்கும் ஜாக்கிரதையாக இரு... நீ நீயாக வராதே... 

புரியுது அண்ணா... விறகு வெட்டி போல வருகிறேன் இந்த முறை...

நல்லது...நல்லது... நேரில் பார்ப்போம்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பாஸ் என்ற சத்யா யோசிக்க ஆரம்பித்தான். நாளை போக வேண்டிய இடத்துக்கு எப்படி செல்லலாம் என்று. அவன் யோசனையை தடுக்கும் வகையில் அறை கதவு தட்டப்பட்டது. 

எஸ் கமீன்...

உள்ளே வந்த நர்ஸ், சார்... ஆப்பரேஷன்க்கு டைம் ஆகிவிட்டது என்று சொன்னாள். அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.