(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

பயந்துட்டேன். அஸ் கிட்ட வர சொன்னேன்.  அவனால வர முடியாத சூழ்நிலை. அதனால் அவனும் பதட்டத்துல உனக்கு போன் பண்ணிட்டான். இப்போ தனு நல்லா தான் இருக்காள். நீ பயப்படாதே என்று சொல்ல அந்த நேரத்தில் சரியாக கண் விழித்தாள் தன்சிகா.

ஜனனியை பார்த்ததும் அவளது கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது. ஜானு நீங்க வந்துட்டீங்களா என்றவாரே தன்சிகா எழும்ப முயற்சிக்க அவள் அருகே சென்ற ஜனனியும் அவளை மெதுவாக படுக்க வைத்தாள். உனக்கு ஒன்னும் இல்ல கன்னுக்குட்டி நீ படுத்துக்கோ நான் உன் பக்கத்துல இருக்கேன் என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்து அவள் தலையைக் கோதிவிட்டாள்

ஜனனியின் கையை பிடித்துக்கொண்டே அமைதியாக மீண்டும் உறங்கிவிட்டாள் தன்சிகா. அவள் நன்கு உறங்குகிறாள் என்பதை உறுதி செய்து கொண்ட ஜனனி தன்ஷிகாவின் கையிலிருந்து தன் கையை ஸ்வீனா அருகில் வந்தாள்.

ஸ்வீனா இது எப்படி ஆச்சு என்றாள் ஜனனி.

அது வந்து தனா அண்ணா பிசினஸ் விஷயமா பாரின் போயிருக்காங்க.

அதாவது தன்சிகா அப்பா பிசினஸ் விஷயமா ஃபாரின் போகும்போது எல்லாம் அவளை கவனித்துக் கொள்ள கேர் டேக்கர்கிட்ட விட்டு விட்டு போவாங்க. அந்த லேடி அண்ணாக்கு ரிலேட்டிவ் தான். இந்த முறையும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. இந்த முறையும் அவங்க போகும்போது அவங்க கிட்ட விட்டுட்டு போனாங்க. அவங்க எப்பவுமே ஒழுங்கா பார்த்து கொள்வார்கள். ஆனா என்னனு தெரியல. அதாவது நேத்து சமைத்த சாப்பாட்டை பிரிட்ஜில வச்சு இருப்பாங்க போல.. அதையே சூடு பண்ணி மறுபடி கொடுத்திருக்காங்க.. இதுல ஏதோ ஃபுட் பாய்சன் ஆகிட்டு. அவங்க சாப்பாடு கொடுத்த அடுத்த செகண்ட்லேயே தன்சிகா வாந்தி எடுத்து மயங்கி விழ உடனடியாக எனக்கு போன் அடிச்சிங்க நான் நேரா அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர சொன்னேன். வந்துட்டாங்க. காட்ஸ் கிரேஸ் இப்போ நல்லா இருக்கா என்று சொல்ல ஜனனிக்கு கோவம் கோவமாக வந்தது.

ஸ்வீனா உங்கள் அண்ணனுக்கு குழந்தை விட அவங்க பிசினஸ்தான் முக்கியமாப் போச்சா, அது சரி உங்கள் அண்ணியை எங்கோ என்று கோவமாக ஏதோ பேச வர அதற்குள் தனுவை செக் செய்வதற்காக டாக்டர் வர அவர்களது பேச்சு அதோடு தடைபட்டது.

மருத்துவமனையில் இருந்து ஒரு நான்கு மணி நேரங்கள் கடந்திருக்கும். தன்சிகா இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட காலையில் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்று விடலாம் என்று கூறி சென்று விட்டார் டாக்டர்.

டாக்டர் சென்ற பிறகு சிறிது நேரம் அந்த அறையில் மௌனம் நிலவியது. ஜனனி எதையோ யோசித்துக் கொண்டிருக்க ஸ்வீனாவும் ஆழ்ந்த யோசனையில் தான் இருந்தாள். ஸ்வீனா

11 comments

• [quote name="AdharvJo"]Wow kutty semma smart 😍😍 adhukula ivanga rendu perum ivalo frndly aitangala (y) janu and Thanu kuda weekend cute agidichi 😁😁😁indha Amma yaru??? Enga ponanga?? Appreciation ellam balama irukku but aalu than kanam :Q: Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 win, baby parthukradhai vida engament than important ah :eek: ena athaiyo facepalm Janardhan aka jana aka dhana :Q: ippovum BMW wala va??? Good going pa.... yaru antha rescuver parka waiting!!!
Thank you.[/quote]
Thank you Jo... Next epi padichitu thitathinga... Me pavam... Thank you dear Adharv...
• [quote name="ரவை .k"]அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி![/quote]
[quote name="ரவை .k"]அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி![/quote]
Thank you dear uncle... :thnkx:
• Wow kutty semma smart 😍😍 adhukula ivanga rendu perum ivalo frndly aitangala (y) janu and Thanu kuda weekend cute agidichi 😁😁😁indha Amma yaru??? Enga ponanga?? Appreciation ellam balama irukku but aalu than kanam :Q: Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 win, baby parthukradhai vida engament than important ah :eek: ena athaiyo facepalm Janardhan aka jana aka dhana :Q: ippovum BMW wala va??? Good going pa.... yaru antha rescuver parka waiting!!!
Thank you.
• அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.