(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தன்சிகாவிடம் கேட்டு தெரிந்து கொள்வது சரியல்ல என்பதை உணர்ந்தவள் ஸ்வீனாவிடம் நிச்சயம் அது பற்றி கேட்க வேண்டும் என்றும் எண்ணி கொண்டாள்.

ஆனால் தன்சிக விடுவது போல இல்லை உங்களுக்கு நான் அம்மா பத்தி சொல்லட்டுமா என்றாள்.

ஆர்வமாக கேட்கும் குழந்தையிடம் வேண்டாம் என்று மறுக்க ஜனனிக்கு தோன்றவில்லை. சரி தனகுட்டி அம்மா பத்தி சொல்லுங்க... அம்மா குட்டிமாவுக்கு என்னலாம் செய்வாங்க என்று கேட்க அவளும் தன் அம்மாவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

காலைல தூங்கி விழித்து எழுந்ததும் அம்மாதான் பிரஸ் பண்ணி விடுவாங்க. அப்புறம் அம்மா பிரஷ் ஜூஸ் கொடுப்பாங்க. உங்களை மாதிரியேதான் அம்மாவும். சமைத்துக் கொண்டே இருந்தாலும் அம்மா என் கூட பேசிக் கொண்டே தான் இருப்பாங்க.

ஆனால் நான் டாடி செல்லம். ஆனால் டாடி பிசினஸ்  ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கும்போது நான் என்ன பேசினாலும் அது அவரோட காதிலேயே விழாது.

ஆனா என்னோட ஸ்வீட் அம்மா அப்படி கிடையாது. எப்போ நான் என்ன கேட்டாலும் எனக்கு பதில் சொல்லிட்டு தான் இருப்பாங்க. நான் விளையாடிட்டு இருந்து  கீழ விழுந்துட்டேனா கூட அழாமலே அம்மா கண்டுபிடிச்சுடுவாங்க...  தெரியுமா என்று அம்மாவை பற்றி விலாவரியாக சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அப்புறம் அம்மா டெய்லியும் என்கூட வாக்கிங் வருவாங்க... அப்புறமா குட்டிக்குட்டியா நிறைய கதை சொல்வாங்க... என்னை எப்பவுமே அவங்க மடியில் படுத்து தான் தூங்க வைப்பார்கள். இன்னிக்கு கூட நான் உங்கள் மடியில் படுத்து தூங்கவா ஜானு என்றாள் தன்சிகா.

ஓகே பட்டுக்குட்டி... இன்னைக்கு நானே உன்னை மடியில் படுக்க வைத்து தூங்க வைக்கேன் சரியா என்றவள் சூடாக தோசையை ஊட்டிவிட அவளும் மறுப்பேதும் கூறாமல் தன் குண்டு கண்களை உருட்டி உருட்டி முக பாவனைகளை மாற்றி கை கால்களை அசைத்து கதை சொல்லிக்கொண்டே சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது ஜனனிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சிறு வயதில் தனக்கு கூட தன் அம்மா இப்படிதான் ஊட்டி விடுவார்கள் என்று நினைக்கும்போது அவளுடைய கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது‌ ஆனால் அதை தனு  அறியும் முன்னே துடைத்துக்கொண்டாள்.

தன்சிகா கொண்டு வந்திருந்த மொபைலில் அழைப்பு வர அதன் சத்தத்தைக் கேட்டதும் டாடி கால் பண்ணுறாங்க என்று சொல்லி வேகமாக ஓடிச்சென்று மொபைலை ஆன் செய்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள் தன்சிகா.

11 comments

• [quote name="AdharvJo"]Wow kutty semma smart 😍😍 adhukula ivanga rendu perum ivalo frndly aitangala (y) janu and Thanu kuda weekend cute agidichi 😁😁😁indha Amma yaru??? Enga ponanga?? Appreciation ellam balama irukku but aalu than kanam :Q: Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 win, baby parthukradhai vida engament than important ah :eek: ena athaiyo facepalm Janardhan aka jana aka dhana :Q: ippovum BMW wala va??? Good going pa.... yaru antha rescuver parka waiting!!!
Thank you.[/quote]
Thank you Jo... Next epi padichitu thitathinga... Me pavam... Thank you dear Adharv...
• [quote name="ரவை .k"]அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி![/quote]
[quote name="ரவை .k"]அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி![/quote]
Thank you dear uncle... :thnkx:
• Wow kutty semma smart 😍😍 adhukula ivanga rendu perum ivalo frndly aitangala (y) janu and Thanu kuda weekend cute agidichi 😁😁😁indha Amma yaru??? Enga ponanga?? Appreciation ellam balama irukku but aalu than kanam :Q: Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 win, baby parthukradhai vida engament than important ah :eek: ena athaiyo facepalm Janardhan aka jana aka dhana :Q: ippovum BMW wala va??? Good going pa.... yaru antha rescuver parka waiting!!!
Thank you.
• அன்புள்ள ஜெபா! கதை விறுவிறுப்பு குறையாமல் சுவையாகச் செல்கிறது. முடிவில், அந்த சஸ்பென்ஸ்தான் எபியின் பியூட்டி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.