நாங்கள் இப்ப தான் சாப்பிட்டு கிளம்புகிறோம். நான் உனக்கு அப்புறம் போன் பண்றேன் இப்ப நீ உன்னுடைய என்கேஷ்மெண்ட் தேவையான வேலையை பாரு என்று சொல்லிவிட்டு வைத்தவள் தன்சிகாவை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றாள்.
பிங்க் கலரில் அழகான ப்ராக்கை தன்சிகாவிற்காக வாங்கினாள் ஜனனி. அதேபோல பிங்க் கலரில் அழகான சுடிதார் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. ஆனாலும் இது தனக்கு செட் ஆகாது என்று ஜனனி அந்த இடத்தை கடக்க முயல தன்ஷிகாவும் உங்களுக்கு இந்த ட்ரஸ் தான் எடுக்கணும். நாம ரெண்டு பேரும் சேமா போடலாம் என்று சொல்லி வற்புறுத்த அதற்குமேல் அவளால் மறுக்க முடியவில்லை. புடவை மட்டுமே கட்டிய தன்னால் இதை போட முடியுமா என்று யோசித்தாள். ஆனாலும் தன்ஷிகாவின் பிடிவாதம் அவளை அந்த ட்ரஸை வாங்க வைத்தது.
அதற்கு சிறிய அணிகலன்களை வாங்கி விட உற்சாகமாக வீடு திரும்பினர். மதிய உணவை முடித்து இருவரும் சாயங்கால பங்ஷனுக்காக கிளம்ப ஆயத்தமானார்கள். அன்று பங்க்ஷன் முடித்ததும் அங்கிருந்து நேரடியாக தன்னுடைய ஊருக்கு செல்வதாக டிக்கெட் புக் செய்திருந்தாள் ஜனனி. இருவரும் பங்ஷனுக்கு ஏற்ப தங்களை அலங்காரம் செய்து கொண்டு கிளம்ப அந்த நேரம் சரியாக ஜனனிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அழைப்பை பேசி முடித்தபின் முகம் சற்று மாறி விட்டது. இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்தீர்கள்... என்னாச்சு என்று தன்சிகா மீண்டும் அவளை கேட்க ஒன்னும் இல்லடா நான் ஊருக்கு போக புக் செய்திருந்த பஸ் ஏதோ ப்ராப்ளம். அதனால பஸ் டைமிங் மாறிப்போனது. என்னால பங்க்ஷன் அட்டென்ட் செய்ய முடியாது போலவே என்று வருத்தமாக கூறினாள் ஜனனி.
கவலைப்படாதீங்க நாம இப்பவே அங்க போகலாம் என்று சொல்ல சரி என்று கேப் புக் செய்து இருவரும் ஸ்வீனா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் ஸ்வீனாவை தேடி வந்தான் ஒருவன். ஹாய் தனா அண்ணா எப்படியோ என்கேஷ்மெண்ட்காவது வந்து சேர்ந்தீங்களே என்றாள் ஸ்வீனா.
ஆமா ஸ்வீனா... லேட் ஆகிட்டு சாரி என்றவன் ஆமா தங்க குட்டி எங்கே என்று கேட்க அவ இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவா என்றாள் ஸ்வீனா. இன்னும் உன்னோட அந்த பிரண்டு தனுவை கூட்டிட்டு வரலையா.. எப்படி தன்சிகாவை ரெடி பண்றது என்று கேட்க உனக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம். அவளே ரெடி பண்ணி கூட்டிட்டு வந்திடுவாள் என்று சொல்ல அவனும் சரி என்று அங்கிருந்து கிளம்பினான்.
அங்கிருந்து வந்தவன் நேராக அஸ்விட்டை போய் பார்த்தான். வந்துட்டியா என்று அவனை கட்டிக்கொண்டான் அஸ் வித்.